அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியகருக்கை கிராமத்தை சோத்தவர் 41 வயதான ராதாகிருஷ்ணன். இவர் அந்த பகுதியில் இயங்கிவரும் அரசு பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அதே பகுதியிலுள்ள பெரியகருக்கை, பூதம்பூர், கானூர் பகுதிகளை சேர்ந்த 3 பெண்களுடன்  ஏற்கனவே திருமணம் நடந்ததாக தகவல் கிடைத்துள்ளது. 


3 பெண்களுக்கும் குழந்தை இல்லாத நிலையில், சண்டையிட்ட ராதாகிருஷ்ணன் கருத்து வேறுபாடுகாரணமாக அவரது மனைவிகளை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். ஏற்கனவே ராதாகிருஷ்ணனின் தம்பி, சொத்துக்களை பிரித்து தர கூறியதாகவும், அதற்கு ராதாகிருஷ்ணன் தனது வாரிசுக்குத்தான் சொத்து என்று கூறி வாக்குவாதம் ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க : Watch video : பீர் பாட்டிலுடன் விளையாடிய பேய்.. பயந்து ஒதுங்கிய பெண்...வைரல் வீடியோ!


இந்தநிலையில், நடத்துனர் ராதாகிருஷ்ணனுக்கும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பேருந்தில்பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஏற்கனவே, அந்த பெண்ணிற்கு 3 மகள்கள் உள்ள நிலையில் தனது 13 வயது மகளுடன் தனியாக ஒரு கிராமத்தில் வசித்து வந்துள்ளனர். 


இதையடுத்து, தனக்கு வாரிசு வேண்டும் என்று தெரிவித்த ராதாகிருஷ்ணன், அந்த சிறுமியை தனது திருமணம் செய்து தருமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவிக்கவே, கடந்த ஆகஸ்டு மாதம் 6 ந் தேதியன்று ஒரு கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும், சிறுமிக்கும் தாய் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. ராதாகிருஷ்ணன் சிறுமியுடன் வற்புறுத்தி உடலுறவு வைத்துக்கொண்ட காரணத்தால், சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.


இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி, அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் புகாரின்பேரில்  போக்சோ சட்டத்தின் கீழ் நடத்துனர் ராதாகிருஷ்ணன் மற்றும் சிறுமியின் தாயையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.


Watch Video: அல்லு அர்ஜூனாக மாறிய டேவிட் வார்னர்: கலாய்த்துவிட்ட விராட் கோலி..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


விழுப்புரத்தில் கொடுமை.! காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கு மொட்டையடித்த பெற்றோர்!!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண