உலகம் முழுவதும் எத்தனையோ முன்னேற்றங்கள் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்தாலும், இன்னும் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் பேய் என்ற சொல்லுக்கு பலரும் நடுங்க தான் செய்கிறார்கள். சந்திரமுகி படத்தில் வடிவேல் சொல்லும் வரிகளான 'தீடிர்னு ஒரு பொருள் உடையுதாம், சாய்யுதாம்' என்பது போல யு.கே. வில் உள்ள பார் ஒன்றில் பேய் பீர் பாட்டிலை உடைத்ததாக ஒரு பெண் தெரிவித்து வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பேய் பீர் பாட்டிலை உடைத்தாக கூறப்படும் லாங் ஆர்ம்ஸ் பார் இதுகுறித்துட்விட்டரில் பகிரப்பட்ட வீடியோவில், மதுக்கடையின் ஒரு பக்கத்தில் ஒரு பெண், மறுபுறம் அமர்ந்திருக்கும் ஆணுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்பொழுது எதார்த்தமாக அந்தப் பெண் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள், திடீரென்று, ஒரு அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ஒரு கண்ணாடி, தானாக கீழே விழுந்து உடைகிறது.
இத்தனைக்கும் அந்த பெண் அந்த மேசையை தொடவில்லை என்று வீடியோ காட்சியில் தெளிவாக தெரிகிறது. மேலும், இந்த பாரில் இது முதல் முறையாக இப்படி நடக்கவில்லை என்றும், இதுபோல் அடிக்கடி நடப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
வீடியோ காட்சியில், ஏற்கனவே பலமுறை நடந்ததுபோல, இன்று இரவும் எங்களது பாரில் பேய் விளையாடியுள்ளது. நீங்கள் நம்பவில்லை என்றால், கீழே உள்ள கண்ணாடி பாட்டிலை பாருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது இந்த வீடியோவை 3,400 க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றும், நெட்டிசன்கள் தொடர்ந்து இந்த வீடியோவை இணையத்தில் ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர். மேலும், அந்த பாரில் இருந்த பெண் லிஸ் ஆல்காக்கின் கணவர் ராப் தெரிவிக்கையில், இதற்கு முன்பும் இதுபோன்ற பல விவரிக்கப்படாத சம்பவங்களை இந்த பார் பார்த்துள்ளது. "நான் சமையலறைக்கு நடந்து செல்லும்போது, இரண்டு வழிகளும் திறக்கும் கதவு ஒன்று இருக்கும். யாரோ ஒருவர் மறுபுறம் இருப்பது போன்று, நாம் கதவை இழுக்க முயற்சிக்கும்போது அதை யாரோ இழுத்து வைத்திருப்பது போல் தோன்றும். நாங்கள் தற்போது இதுபோன்ற விஷயங்களுக்கு பழக்கப்படுத்தி கொண்டோம்" என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்