புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காரைக்கால் பகுதியில் இருந்து மயிலாடுதுறை வழியாக மது கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது.  இதனை தடுக்க பல்வேறு  நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வந்தாலும் மது கடத்தல் குறைந்தபாடில்லை. பல்வேறு வழிகளை தமிழக எல்லைக்கு மது கடத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. 



World Tallest Murugan Statue: உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை திறப்பு தேதி அறிவிப்பு.. முழு விவரம்..


சீர்காழி அருகே தென்பாதி எனுமிடத்தில், சீர்காழி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சீர்காழி நோக்கி வேகமாக வந்த TN 51 C - 2768 மாருதி சுசூகி 800 காரை  சந்தேகத்தின் பேரில் சீர்காழி காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின்  போது 40 சாக்கு மூட்டையில் 2000   புதுச்சேரி மாநில  சாராயம் பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. 




Ramadan Mubarak : ரமலான் முபாரக்.. நண்பர்களுக்கு இந்த வாழ்த்துகளை அனுப்பி வாழ்த்து சொல்லுங்க..


மதுபாட்டில்கள் கடத்தல் குறித்து கார் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் காரில் பாண்டிச்சேரி மதுபாட்டில்களை கடத்தி வந்த நபர் மயிலாடுதுறையை சேர்ந்த செந்தில் குமார் என்பது தெரியவந்தது. இச்சம்பவத்தில் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் மது பாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் மற்றும் காரின் மதிப்பு சுமார் இரண்டு லட்சம் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளார். 




இதே போன்று சீர்காழி பகுதியில் முருகன் என்பவரிடம் இருந்து 10 ஆயிரம் மதிப்புள்ள 240 தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வகை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் யாரிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது என்பது குறித்தும் முருகனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சீர்காழியில் அடுத்தடுத்து தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் காரைக்கால் மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும் விடுதலைக்குப் பின் மீண்டும் அவர்கள் இதே தொழிலில் தான் ஈடுபட்டு வருகின்றனர் எனவும், இதனை தடுக்க காவல் துறையினர் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.