உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்கான போர் தொடர்ந்து 30 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. உக்ரைன் நகரின் பல்வேறு பகுதிகள் ரஷ்யாவின் தாக்குதலில் மோசமாக பாதிக்கப்பட்டன. கிவ் பகுதியில் உள்ள அரசு கட்டிடங்கள், கல்வி நிறுவங்கள் உள்பட பல லட்சக்கணக்கான மக்கள் போரில் மாண்டனர்.


ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் நாட்டில் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், அந்நாட்டின் தலைநகரனா கீவிற்கு அருகில் 410 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெளிவாகியுள்ளது. ராய்டர்ஸ் செய்தி தளம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, தாக்குதலில் பலியான மக்களின் உடல் ஆங்காங்கே கிடைத்திருப்பதாகவும் அதை பார்த்த மக்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்துகிடப்பவர்களின் உடல்களை பார்த்தவர்களால், அதிர்ச்சியில் பேச முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், உக்ரைன் தலைநகருக்கு அருகில் உள்ள சில முக்கிய  முக்கிய நகரங்களில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கியதைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள பல பிராந்தியங்களில் ரஷ்யா மீண்டும் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. கிவ், இர்பின், புச்சா,கோஸ்ட்மால் போன்ற இடங்களில் ரஷ்யா நடத்திய தாக்குதலின் விளைவுகள் பற்றியும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.






புச்சா நகர் முழுக்க தாக்குதலில் இறந்த உடல்களால் நிரம்பியிருக்கும் காட்சிகளை உக்ரைன் ராணுவம் பகிர்ந்துள்ளது. ரஷ்யா தாக்குதல் நடத்திய பகுதிகளை கைப்பற்றியுள்ள உக்ரைன் ராணுவம் அப்பகுதிகளில் ராணுவ வீரர்களை விட, மக்கள் அதிகமாக ரஷ்யாவின் தாக்குதலுக்கு பலியாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.


புச்சா நகரில் கிடக்கும் மனித உடல்களில், ஒருவர் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது கொல்லப்பட்டுள்ளார். பலரது கைகளில் தங்களது கைகளில் ஷாப்பிங் சென்று வந்த பைகள் இருக்கின்றன. இதை பார்த்த மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண