இஸ்லாமிய மக்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பு நோற்பார்கள். ரமலான் மாதத்தின் பிறை தென்பட தொடங்கியதன் பிறகு அவர்கள் நோன்பைக் கடைப்பிடிப்பார்கள். ரமலான் மாதத்தின் இறுதியில் ரம்லான் பண்டிகை கொண்டாடப்படும்.




1400 ஆண்டுகளுக்கு முன்பு, ரமலான் மாதத்தில்தான் திருகுர்-ஆன் அருளப்பட்டது. இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலானிற்கு வாழ்த்துகளை பகிர்வதற்கான வாழ்த்து செய்திகளை இந்தத் தொகுப்பில் காணலாம்.


 



ரமலான் வாழ்த்துகள்


அல்லாவை நினைத்து நீங்கள் செய்யும் பிரார்த்தனைகள், அல்லா மீதான உங்கள் நம்பிக்கை, உங்கள் பற்றி-இவை உங்களை ஒரு நல்ல மனிதனாக்கும். இந்தச் சமூகத்திற்கு நன்மை செய்யக்கூடிய ஆற்றலை உங்களுக்கு அல்லா வழங்குவார். இனிய ரமலான் நல்வாழ்த்துகள்.


 



Caption






நல்வாழ்விற்கான பயணத்திற்கு அல்லா உங்களை என்றும் வழிநடத்துவார். அல்லாவை நம்புங்கள். இந்த ரமலான் பண்டிகை உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் அமைதியையும், எல்லா நன்மைகளையும் வழங்கட்டும். இனிய ரம்ஜான் வாழ்த்துகள்.








அல்லாவிடம் நம்பிக்கைக் கொள்ளுங்கள். அன்பை விதையுங்கள்; பகிந்து உண்ணுங்கள். வலிகள் தேய் பிறையாய் மறையட்டும். வசந்தம் வளரட்டும். இனிய ரமலான் வாழ்த்துகள்.







 






 


இந்த ரமலான் மாதம் நமக்கு எல்லையில்லா அல்லாவின் அருளை வழங்கட்டும். இனிய ரமலான் வாழ்த்துகள்.