ஒரே நேரத்தில் பல பெண்களை காதலித்து சுற்றும் இளைஞர்களை குறிப்பதற்காக ப்ளே பாய் என்ற வார்த்தை பயன்படுத்தப்படும். பொதுவாக, வேலை தேடும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் படித்துக்கொண்டிருப்பவர்களுக்காக வேலைவாய்ப்பு என்று சுவர்களிலும், பேருந்துகளிலும் விளம்பரம் ஒட்டப்பட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம்.


அதிர்ச்சி தந்த போஸ்டர்:


இணைய வளர்ச்சி அடைந்த பிறகும் பல இடங்களில் செக்யூரிட்டி, சமையல் வேலை, பார்ட் டைம் வேலை என்று பல வேலைகளுக்கு போஸ்டர் ஒட்டப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த சூழலில், உத்தரகாண்டில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரகாண்ட் மாநிலத்தின் மிக முக்கிய நகரம் டேராடூன். இந்த நகரத்தில் உள்ள மின்கம்பங்கள், சுவர்களில் எல்லாம் ப்ளே பாய் வேலைக்கு ஆட்கள் தேவை என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ப்ளே பாய் என்று மேலே குறிப்பிட்டிருந்தாலும், கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு கீழே ஆண் பாலியல் தொழிலாளி என்று ஆங்கிலத்தில் குறிக்கும் கிகோலோ வேலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


கிகோலா வேலை:


மேலும், இந்த போஸ்டரில் தினசரி 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சம்பாதிக்க வேண்டுமா? என்ற வாசகங்களுடன் ஒட்டப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு சேர 2 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டுமென்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் டேராடூன் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த மாநில காவல்துறை இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறது.


இதுபோன்ற போஸ்டர்களால் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள், இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லும் அவல நிலை ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளனர். கால் பாய் எனப்படும் ஆண் பாலியல் தொழிலாளர்கள் வெளிநாடுகளை போல இந்தியாவிலும் தற்போது பரவலாக நடைபெற்று வருகிறது. ஆனால், இதுபோன்று போஸ்டர் ஒட்டி கால் பாய் வேலைக்கு ஆட்கள் தேவை  என்று விளம்பரப்படுத்தியிருப்பது இளைஞர்களை தவறான பாதைக்கு வழிநடத்தும் செயல் என்றும் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.


இந்த போஸ்டரை ஒட்டியவர்கள் யார்? இந்த கும்பலில் மொத்தம் எத்தனை பேர்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண் பாலியல் தொழிலாளர்கள் தேவை என்று டேராடூனில் போஸ்டர் அடித்து ஒட்டியது பெரும் பரபரப்பை அந்த மாநிலத்தில் ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: Crime: அராஜகம்.. நட்ட நடுரோட்டில் போலீஸ் எஸ்.ஐ. சுட்டுக்கொலை - உத்தரபிரதேசத்தில் கொடூரம்..!


மேலும் படிக்க: Crime: அடக்கொடுமையே! மனைவியின் விரலை கடித்து தின்ற கணவன்; கோபத்தால் வெறிச்செயல்...பெங்களூருவில் ஷாக்!