செங்கல்பட்டு மாவட்டம் படாளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மையூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவர் சென்னையில் உள்ள தனிப்பிரிவு குற்றப்பிரிவுத்துறை தலைமை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார் . இந்நிலையில் செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியில் தன் மனைவி பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் தங்கி பணிக்கு சென்று வந்திருந்தார்
இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவம் பற்றி அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் செங்கல்பட்டு தாலுகா போலீசார் உயிரிழந்த சுந்தர்ராஜன் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு வேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையை தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது, குடும்ப பிரச்சனை காரணமாக இந்த தற்கொலை நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருந்தும் தற்கொலைக்கு காரணம் வேறு ஏதாவது இருக்கிறதா என்று கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளோம். பணி சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்று கோணத்தில் கூட விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
Suicidal Trigger Warning.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்