சமூக ஊடகங்களின் ஆதிக்கம் இணையத்தில் அதிகமானதும் தான் ஆனது எந்த வீடியோ எப்போது எப்படி வைரலாகும் என்று கூற முடியாதை நிலையை உண்டாக்கி விட்டது. டிக் டாக்கில் தொடங்கிய இந்த குறுகிய நேர  வீடியோக்கள் தற்போது இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் ஷாட்ஸ் என அடித்து ஏறி சென்று கொண்டிருக்கிறது. 


சிறு குழந்தைகள் செய்யும் சுட்டித்தனமான சேட்டைகள், காட்டு விலங்குகளின் வேட்டை, பாடல் கிளிம்ப்ஸ், செல்லப்பிராணிகளின் வித்தியாசமான செய்கைகள், பிரபலங்களின் வீடியோக்கள், என பல வீடியோக்கள் வைரல் ஹிட் ரகத்தில் இணைந்திருக்கின்றன. இந்த  வைரல் ஹிட்டால் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து கோடிகளில் சம்பளம் வாங்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.


அந்த வரிசையில் தற்போது ஒரு வீடியோ இன்ஸ்டாகிராமை கலக்கிக் கொண்டிருக்கிறது. என்ன வீடியோ என்று கேட்கிறீர்களா.. அது ஒரு கோழி அடைக்காக்கும் வீடியோ.. கோழி தனது குஞ்சுகளை அடைகாப்பதில் என்னயா சுவாரஸ்சியம் என்று கேட்கிறீர்களா? 


அங்குதான் இருக்கிறது ட்விஸ்ட்.. இன்ஸ்டாகிராமில் வைரலான அந்த வீடியோவில், கோழி ஒன்று பெட்டிக்குள் இருக்கிறது. அப்போது அங்கு வரும் ஒரு நபர் பெட்டிக்குள் இருந்த கோழியின் உடலை தூக்குகிறார். சரி, உள்ளே இருந்து கோழி குஞ்சுகள் வரும் என்று பார்த்தால், உள்ளே இருந்து மொசுமொசுவென மூன்று பூனைக்குட்டிகள் மியாவ் என்று வந்தது.


அடிக்கும் மழைக்கு, கோழியின் உடலுக்குள் இருந்து இதமான சூட்டை உள்வாங்கிக்கொண்டிருந்த அந்த பூனைக்குட்டிகள் பார்ப்பதற்கே மிக அழகாக இருந்தது. இதை பார்த்த நெட்டிசன்கள் வாவ் என இன்ஸ்டாவில் ஹார்டின்களை பறக்க விட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.