இயக்குநர் மணிகண்டன்


குழந்தைகளின் மொழியில் பேசும்போது பல காத்திரமான அரசியலை அவர்களைக் கொண்டு மிக இயல்பான வார்த்தைகளில் சொல்லிவிட முடிகிறது. காக்கா முட்டைத் திரைப்படம் சிறந்தப் படத்திற்கான தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உசிலம்பட்டியில் காக்கா முட்டை பட இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் 2 தேசிய விருதுக்கான பதக்கங்கள், 1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டதாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தேசிய விருதுக்கான இரு வெள்ளி பதக்கங்களை மட்டும், மன்னிப்பு கடிதத்துடன் கொள்ளை கும்பல் தொங்க விட்டு சென்றுள்ளனர்.


Womens Job Fair: மகளிர் தொழில் முனைவோரை கண்டறியும் முகாம் - பதிவு செய்ய நாளையே கடைசி தேதி



 


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எழில் நகரைச் சேர்ந்தவர் இயக்குநர் மணிகண்டன். காக்கா முட்டை, கடைசி விவசாயி உள்ளிட்ட தேசிய விருது பெற்ற படங்களை இயக்கிய மணிகண்டன் தற்போது பட வேலைக்காக குடும்பத்துடன் கடந்த 2 மாதங்களாக வசித்து வருகிறார். இந்நிலையில் பூட்டி இருந்த இவரது வீட்டில் கடந்த 8 -ம் தேதி மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பிரோவில் இருந்த கடைசி விவசாயி திரைப்படத்திற்காக மத்திய அரசால் வழங்கப்பட்ட இரு தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்கள், 1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றனர். பிரபல இயக்குநர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.




விருதை விட்டுச் சென்ற திருடர்கள்


இந்நிலையில் இன்று மணிகண்டன் வீட்டில் பாலித்தீன் பையில்  அய்யா எங்களை மன்னித்து விடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கு  என்ற மன்னிப்பு கடிதத்துடன் தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களை மட்டும் கொள்ளை கும்பல் தொங்க விட்டுச் சென்றுள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் தேசிய விருதுக்கான பதக்கங்களை கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருடர் குல திலகம்


தேசிய விருதுக்கான இரு வெள்ளி பதக்கங்களை மட்டும், மன்னிப்பு கடிதத்துடன் கொள்ளை கும்பல் தொங்க விட்டு சென்ற நிலையில் இந்த செய்தியை அறிந்த நெட்டிசன்கள். ”திருட்டு என்பது மிகப்பெரும் தவறான விடயம் தான். ஆனாலும் திருட்டிலும் ஒரு நியாயம் வச்சுருக்கான்யா” இயக்குநரின் விருதை மீண்டும் விட்டுச் சென்ற திருடர் குல திலகமே” என்று மர்ம நபர்களை நகைச்சுவையாக பாராட்டி வருகின்றனர்.


 



இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Pudupattinam Beach: சூப்பர் சுற்றுலாத்தலம் புதுப்பட்டினம் பீச்... அடிப்படை வசதிகள் செய்து தாங்க: மக்கள் கோரிக்கை


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Madurai: மீண்டும் ரூ.3 கோடி மதிப்பிலான நிலம் தானம்.. மதுரை ஆயி பூரணம்மாள் அடுத்தடுத்து அசத்தல்!