மும்பையில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் பெண் ஒருவர் நிர்வாண வீடியோ கால் பேசி மிரட்டி 17 லட்சம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


குஜராத் மாநிலம் பாந்த்ரா பகுதியை சேர்ந்த 64 வயதானவர் விக்ரம் ரத்தோட். இவர் கடந்த 2019 ம் ஆண்டு வங்கி ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு பெண்ணிடம் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. முதலில் யார் என்று அறிவதற்காக முன்னாள் வங்கி அதிகாரி யார் என்று கேட்டு மெசேஜ் அனுப்பியுள்ளார். இப்படியே தொடங்கிய உரையாடல் நீண்டநேரமாக சென்றுள்ளது. சாதரணமாக பேசிக்கொண்டிருந்தபோது அந்த பெண் திடீரென ஆபாசமாக பேச தொடங்கியுள்ளார். 


தொடர்ச்சியாக அந்த பெண் ஆபாசமாக பேச தொடங்கி, அந்த நபரில் வாட்ஸ் அப் எண்ணிற்கு வீடியோ கால் செய்துள்ளார். எதிர்பாராத நேரத்தில் வீடியோ கால் செய்ததால் அந்த நபரும் ஏதோ ஒரு ஆர்வத்தில் காலை அட்டென்ட் செய்துள்ளார். அப்போது ஒரு பெண் வீடியோ காலில் நிர்வாணமாக நின்றதை கண்டதும் அந்த நபர் அதிர்ச்சியடைந்து பின்னர் ஆர்வமாக பார்த்துள்ளார். அப்போது அந்த பெண் வீடியோ காலில் வங்கி அதிகாரியின் முகத்தோடு வீடியோ பதிவு செய்துள்ளார். 


உடனடியாக வீடியோ கால் கட் ஆனதும் அந்த நபரின் எண்ணிற்கு ஒரு வாய்ஸ் மெசேஜும், காலும் வந்துள்ளது. அதில் நீங்கள் என்னை நிர்வாணமாக பார்த்ததை வீடியோவாக பதிவு செய்துள்ளேன். நீங்கள் எனக்கு உடனடியாக ரூ. 10 ஆயிரம் அளிக்க வேண்டும், அவ்வாறு தரவில்லை என்றால் காவல்துறையினரிடம் புகார் அளிப்பேன் என கூறி மிரட்டியுள்லார். மிரட்டலுக்கு பணியாத அந்த நபர் பணம் எதுவும் கொடுக்கவில்லை. 


 கடந்த மாதம் 22ம் தேதி டெல்லி சைபர் கிரைம் காவல்துறையில் இருந்து பேசுவதாக கூறி விக்ரம் ரத்தோட் மொபைல் எண்ணிற்கு போன் வந்துள்ளது. அதில், டெல்லி சைபர் போலீசில் ஒரு பெண் உங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், மும்பையில் இருந்து அவரை கைது செய்ய போலீஸ் குழு விரைவில் புறப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். உங்களை கைது செய்ய விரும்பவில்லை என்றால், அந்தத் தொகையை அவரது வங்கிக் கணக்கில் ரூ. 16 லட்சம் டெபாசிட் செய்யுமாறு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ரத்தோட் ஒரே தவணையாக இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை செலுத்தியுள்ளார். 


தொடர்ந்து, நிர்வாண வீடியோவை யூடியூப்பில் பதிவேற்றியதாகவும், விரைவில் ரன்வீர் குப்தா என்ற யூடியூப் ஓனரிடம் இருந்து உங்களுக்கு அழைப்பு வரும் என்றும், அவர் அதன்பிறகு உங்கள் வீடியோவை அகற்றுவார் என்றும் கூறியுள்ளனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு, ரத்தோட்டிற்கு யூடியூப் சேனலில் இருந்து அழைப்பு வந்தது, அப்போது அவரிடம் வீடியோவை அகற்ற ₹ 1.30 லட்சம் கேட்டுள்ளனர். இதனால பயந்துபோன அவர் ஆன்லைன் மூலமாக கேட்ட பணத்தை டெபாசிட் செய்துள்ளார். 


தொடர்ச்சியாக வீடியோ கால் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, அவரது தந்தை பணம் கேட்டு வருகிறார் என்றும், குறிப்பிட்ட பணத்தை டெபாசிட் செய்யும்படி கேட்டுள்ளனர்.  ஒரு கட்டம் வரை அமைதியாக இருந்த பாந்த்ரா காவல்துறையை அணுகி அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்தார்.


பிரிவுகள் 170 (அரசு ஊழியராக ஆள்மாறாட்டம் செய்தல்), 385 (பணம் பறித்தல்) மற்றும் 387 (பணம் பறிப்பதற்காக ஒரு நபரை மரண பயத்தில் வைத்தல் அல்லது காயப்படுத்த முயற்சி செய்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.