மதுரை மாநகராட்சி வரிவிதிப்பில் அதிகாரிகளின் பாஸ்வேர்டை பயன்படுத்தி மாநகராட்சி பணத்தில் பல கோடி மோசடி. மாநகராட்சி அலுவலர்கள் இருவரை கைது செய்து சைபர்கிரைம் மற்றும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை தீவிரம் - மேயருடன் நெருங்கிய அதிகாரிகளிடம் தீவிர விசாரணை.
 
5 பேரை பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்
 
மதுரை மாநகராட்சியில் வரி வசூல் தொடர்பாக கடந்த ஆண்டு  ஆணையாளர் நடத்திய வாராந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு விதிகளை மீறி வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது, தெரியவந்தது. இதுகுறித்து உதவி ஆணையர்கள் குழுக்கள் நடத்திய விசாரணையில் 1 கோடியே 50 லட்சத்திற்கு மேல் வரி வசூலில் முறைகேடு நடைபெற்றது, தெரியவந்துள்ளது. இந்த முறைகேட்டில் 13 பில் கலெக்டர்களுக்கு தொடர்பு இருந்தது தெரிந்தது. அதில் 2 பேர் இறந்துவிட்ட நிலையில் 11 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டு பின்னர் 5 பேரை பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
 
சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை தொடர்ந்துள்ளனர்
 
மேலும் கணினி பரிமாற்ற ஆதாரங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளதாக கூறி ஆணையாளர் தரப்பில்  சைபர் கிரைம்  காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த விசாரணையில் போது முறைகேட்டுக்கான ஆதாரம் சிக்கிய நிலையில் விசாரணையை தொடர்ந்து நடத்திவரும் சைபர் கிரைம் காவல்துறையினர். மதுரை மாநகராட்சி 3ஆம் மண்டல அலுவலகத்தில் கணிணி ஆபரேட்டர்  மண்டல தலைவர் நேர்முக உதவியாளர், ஆகியோரை கைது செய்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை தொடர்ந்துள்ளனர்.
 
மேயருடன் நெருங்கிய அதிகாரிகளையும் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை
 
மாநகராட்சியில் வரிவிதிப்பு குறித்து ஒவ்வொரு நிலையிலும், அதாவது பில் கலெக்டர் முதல் வருவாய் ஆய்வாளர், உதவி கமிஷனர் (வருவாய்), துணை கமிஷனர், கமிஷனர் வரை ஒவ்வொருவருக்குமான தனி தனி பாஸ்வேர்டை மோசடியாக பயன்படுத்தி ஒப்புதல் பெற்றதாக, சிலர் மீது புகார் எழுந்துள்ளது. அது குறித்தான விசாரணையில் மேயருடன் நெருங்கிய அதிகாரிகளையும் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இதேபோன்று பண மோசடி வழக்கு என்பதால், மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரும் இந்த முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றனர்.