மும்பையில் 4 சிறுவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை அளித்து 30 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மும்பை கிழக்குப்பகுதி புறநகர் பகுதியில் வசித்து வருபவர் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் வசித்து வருகிறார். இந்த பகுதியில் ஏராளமான சிறுவர்களும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அந்த இளைஞர் அந்த பகுதியில் உள்ள 9 வயது சிறுவன் ஒருவனை தனது அறைக்கு வருமாறு அழைத்துள்ளார். மேலும், அந்த சிறுவனுக்கு ஃபலூடா வாங்கித்தருவதாகவும், ரூபாய் 50 தருவதாகவும் கூறியுள்ளார். இதனால், அந்த சிறுவனும் ஃபலூடா சாப்பிட ஆசைப்பட்ட அந்த இளைஞரின் அறைக்கு சென்றுள்ளார். ஆனால், அங்கு சென்ற பிறகு அந்த இளைஞர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த சிறுவன் தனது வீட்டிற்கு பயந்து சென்றுள்ளான். பின்னர், தனது பெற்றோர்களிடம் அந்த இளைஞர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததை கூறியுள்ளான். இதைக் கேட்ட அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளனர்.
சிறுவனின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர். போலீசார் விசாரணையில் மேலும் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தது. அந்த 30 வயது இளைஞர் இந்த சிறுவன் மட்டுமின்றி மேலும் 3 சிறுவர்களுக்கும் ரூபாய் 50 தருவதாகவும், ஃபலூடா வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. அந்த சிறுவர்கள் அனைவருக்கும் 9 வயது முதல் 12 வயது வரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, அந்த இளைஞர் மீது குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை அளித்த குற்றச்சாட்டிற்காக பிரிவு 354 ஏ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 50 ரூபாய் பணமும், ஐஸ்கிரீமும் வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி இளைஞர் 4 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : Erode : இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்த மகன்கள்... உயிரோடு வீட்டிற்கு வந்த ஈரோடு தந்தை!
மேலும் படிக்க : சதுரங்கவேட்டை பட பாணியில் இரிடியம் மோசடி - ராம்பிரபுவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்