கோடை வெயிலின் தாக்கமும் அதிகரித்து வரும் நிலையில் மழையின் அளவு முற்றிலும் குறைந்து வருவதாலும் தேனி, வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில், மதுரை அழகர் கோயில் சித்திரை திருவிழா நடைபெறவிருப்பதால் வைகை அணை மற்றும் முல்லை பெரியாறு அணையில் இருக்கும் தண்ணீரை திறக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாலும் அணைகளின் நீர் மட்டம் குறையும் சூழல் உருவாகி உள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டியில் கட்டப்பட்டுள்ள வைகை அணை மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஆண்டிபட்டி மற்றும் மதுரை நகரங்களுக்கு தேவையான குடிநீர் தேவைக்கும் இந்த அணையின் நீரை கொண்டே பயன்படுகிறது. இந்த அணைக்கு வரும் நீர் வரத்தானது முல்லை பெரியாறு அணை, வருசநாடு, கம்பம், போடி உள்ளிட்ட பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான கொட்டக்குடி ஆறு, போடிமெட்டு, குரங்கணி போன்ற மலையடிவார பகுதிகளிலும் உள்ள அணைகளில் இருந்தும் நீர் வரும். தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாலும் போதிய மழையின்மையாலும் அனைத்து ஆறுகள் அணைகளில் நீரின் அளவு குறைந்தும் வறண்டும் காணப்படுகிறது.
அதே போல மழையின் அளவு குறைந்ததால் குறிப்பாக தேனி , திண்டுக்கல், மதுரை , ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையிலும் தற்போது நீரின் அளவும் மிக குறைந்து வருகிறது. அணையின் மொத்த நீர்பிடிப்பு பகுதியானது 111 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் நீர்தேக்க பகுதியில் 71 அடி வரை நீரை சேமித்து வைக்க முடியும்.
தேனி மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகள் நிலவரம்
வைகை அணை: நீர்மட்டம் - 68.70 (71 அடி), நீர் இருப்பு – 5496 மில்லியன் கன அடி, நீர் வரத்து – 0 , நீர் திறப்பு – 72 கனஅடி
மஞ்சலார் அணை: நீர்மட்டம் - 34 (57 அடி) ,நீர் இருப்பு –115.12 மில்லியன் கனஅடி , நீர் வரத்து – 0 கன அடி , நீர் திறப்பு– 0
சோத்துப்பாறை அணை: நீர்மட்டம் - 75.44 (126.28 அடி) , நீர் இருப்பு – 115.12 மில்லியன் கனஅடி, நீர் வரத்து – 0 கனஅடி, நீர் திறப்பு – 0 கனஅடி
சண்முகா நதி அணை: நீர்மட்டம் - 25.65 (52.55 அடி), நீர் இருப்பு – 15.87மில்லியன் கனஅடி, நீர் வரத்து – 0 கனஅடி, நீர் திறப்பு – 0 கனஅடி