தமக்கு விவாகரத்து வழங்க சம்மதிக்காததால் மனைவியைக் கொல்ல முயன்ற 40 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மும்பையை அடுத்த பன்வெல்லில் உள்ள ஹெடுடனே கிராமத்தில் வசிக்கும் 35 வயதான சாரதா ஜல்லா கடந்த செவ்வாய்கிழமை இரவு அவரது கணவர் மற்றும் கணவரின் உறவினர்கள் வலுக்கட்டாயமாக ஃபீனைல் குடிக்க வைத்ததாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 


இதையடுத்து, அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்த காவல்துறையினர், புதன்கிழமை ஜல்லாவை தாக்கிய கணவர் மற்றும் உறவினர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.


மேலும் படிக்க : "என் மனைவிக்கு ஆண்குறி உள்ளது, அவள் பெண்ணே இல்லை".. உச்சநீதிமன்றத்தை அதிரவைத்த வழக்கு!


ஜல்லா தனது இரண்டு குழந்தைகள் மற்றும் கணவருடன் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் போக்குவரத்து மற்றும் கூரியர் வணிகத்தை தனியாக நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாகவே ஜல்லாவின் கணவருக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதை தெரிந்துகொண்ட ஜல்லா முதலில் அதிர்ச்சியடைந்து பிறகு சண்டையிட்டுள்ளார். தொடர்ந்து, இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர், அவரது கணவர் சிவ்சரண் விவாகரத்து கேட்டு வரவே, ஜல்லா தொடர்ந்து விவாகரத்து தர  மறுத்து வந்தார்.




கடந்த செவ்வாய்கிழமை இரவு, அவரது கணவரின் உறவினர்கள் வீட்டிற்கு வந்து, விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ளும்படி ஜல்லாவை கட்டாயப்படுத்தியுள்ளனர். அந்தப்பெண் மறுத்தபோது, ​​கணவன் ஜல்லாவின் வாயில் கட்டாய படுத்தி பினாயில் குடிக்கவைக்க முயற்சி செய்துள்ளார். மேலும், கணவரின் உறவினர்கள் ஜல்லாவின் இறுக்கமாகப் பிடித்துள்ளனர். 


மேலும் படிக்க : Maharashtra : பண்ணாத ஆர்டருக்கு வீட்டு வாசலில் டெலிவரிபாய்! பெட்டிக்குள் கத்தி! திட்டம்போட்டு நகை திருட்டு!


இந்த சூழலில் ஜல்லா அளித்த குற்றச்சாட்டின்படி, நாங்கள் வழக்குப் பதிவு செய்து அவரது கணவரைக் கைது செய்துள்ளோம். மேலும், உறவினர்களிடம் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம்” என்று பன்வெல் தாலுகா காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


Watch Video: நேரில் பார்த்தால் காலில் விழுந்து அழுவேன்.. ஸ்ரேயா கோஷல் பற்றி உருகி பேசிய சிவாங்கி!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண