மும்பையில், அடையாளம் தெரியாத நபரால் நாயின் ஆணுறுப்பு அறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையின் அந்தேரி (கிழக்கு) கபஸ்வாடி பகுதியில் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி இரவு அடையாளம் தெரியாத நபரால் நாயின் ஆணுறுப்பு வெட்டப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இனச்சேர்க்கையின்போது நாயின் பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


இதனைத்தொடர்ந்து, பரேலில் உள்ள விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புக்கான பாம்பே சொசைட்டிக்கு நாய் விரைந்து கொண்டு செல்லப்பட்டது.  கால்நடை மருத்துவர் நாயை காப்பாற்ற அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டார். மேலும் படிக்க: Crime | "கேட்டா கொடுக்க மாட்ட.." : பெண்ணின் மூக்கை வெட்டிய காதலன்..குடிக்க பணம் தராததால் கொடூரம்


இந்த சம்பவம் தொடர்பாக, கால்நடை பராமரிப்புத் துறை துணை ஆணையர் டாக்டர் ஷைலேஷ் பெத்தே டிஎன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 1960ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


"சம்பவத்தை அறிந்தவுடன் நாங்கள் கபஸ்வாடியில் விலங்குகள் கொடுமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு விரைந்தோம். நாய் பாம்பே சொசைட்டிக்கு மாற்றப்பட்டது. அங்கு அதன் நிலை மோசமாக உள்ளது" என்று உள்ளூர் கால்நடை தீவன அபான் மிஸ்திரியை மேற்கோள் காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.


குற்றவாளியைக் கண்டுபிடிக்க அந்தேரி பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பார்க்குமாறு காவல்துறையினரைக் கேட்டுக் கொண்டதாகவும், இது ஒரு பயங்கரமான மிருகக் கொடுமை என்றும் இந்திய விலங்குகள் நல வாரியத்தின் அதிகாரி மித்தேஷ் ஜெயின் கூறினார்.மேலும் படிக்க: காதலியை கிண்டல் செய்ததால் அரிவாள் வெட்டு: பதிலுக்கு 17 வயது காதலனை பழிதீர்த்த கும்பல்!


இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடுமாறு விலங்குகள் நல ஆர்வலர்கள் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். விலங்குகளை துன்புறுத்தும் வழக்குகளில் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக பிசிஏ சட்டம் 1960 இல் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


விலங்குகளை துன்புறுத்தியவர்கள் வெறும் 50 ரூபாய் அபராதம் செலுத்தி தப்பித்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. நாய்க்கு நேர்ந்த இந்த கொடூரச் சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் படிக்க: நிர்வாண புகைப்படம், வீடியோவை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை.. சிக்கிய சைக்கோ


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண