மைனர் பெண்கள் உட்பட பெண்களை இன்ஸ்டாகிராமில் மிரட்டிய குற்றச்சாட்டின் பேரில் ஒரு வாலிபரை ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.


ஹனுமகொண்டா மாவட்டத்தில் உள்ள பர்கலைச் சேர்ந்த பாலகுர்த்தி அஜய் (19) என்பவர் ஹைதராபாத்தின் தில்சுக்நகரில் வசித்து வந்தார். இவர், பல்வேறு பெயர்களில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்குகளை உருவாக்கி, மைனர் பெண்கள் உள்ளிட்ட அப்பாவி சிறுமிகளை குறிவைத்து பிரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்துள்ளார். அவர்களிடம் நன்கு பழகி, அவர்கள் இந்த இளைஞருக்கு தங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பியுள்ளார்.


பிறகு, அந்த புகைப்படங்கள், வீடியோக்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தங்களின் படங்களை வெளியிட்டு விடுவாரோ என்று பயந்து பெண்கள் அந்த இளைஞரின் பாலியல் இச்சைக்கு ஆளாகியுள்ளனர். மேலும் படிக்க: மருமகனுடன் வீட்டை விட்டு ஓடிப்போன மாமியார்: பெற்ற மகளுக்கே வில்லியாக மாறிய தாய்..!


இந்த நிலையில், கடந்த நவம்பர் 29ஆம் தேதி ஒரு மைனர் சிறுமி அந்த இளைஞர் குறித்து போலீசாரிடம் புகார்  கூறினார், கடந்த சில நாட்களாக அஜய் தனது இன்ஸ்டாகிராமில் தனது தனிப்பட்ட படங்களைப் பயன்படுத்தி துன்புறுத்துவதாகவும் மிரட்டுவதாகவும் கூறினார். மேலும், அந்த இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் தனது மைனர் சிறுமியை மிரட்டி பணமும் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து அஜய் கைது செய்யப்பட்டார். 




குற்றம்சாட்டப்பட்ட இளைஞர், அப்பாவி சிறுமிகளை சமூக ஊடக கணக்குகளில் அணுகி, அவர்களின் நிர்வாண செல்ஃபி வீடியோக்களைப் பகிருமாறு கேட்டு அவர்களை சிக்க வைத்தார் என்றும்,  வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு போலி இன்ஸ்டாகிராம் கணக்குகளை உருவாக்கி, மைனர்கள் உட்பட அப்பாவி சிறுமிகளுக்கு ப்ரெண்ட் ரெக்வெஸ்ட்  அனுப்புவார் என்றும், அவரது நண்பர் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, அவர் சாதாரண அரட்டை மூலம் அவர்களுடன் நட்பை வளர்த்துக் கொண்டு, அவர்களை கவரும் விதமாக பேசி தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பெற்று, பிறகு அவர்களை மிரட்டத் தொடங்குவார்" என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் படிக்க: காதல் கல்யாணத்துக்கு எதிர்ப்பு.. புதுமாப்பிள்ளையின் அந்தரங்க உறுப்பை கட் செய்த பெண் வீட்டார்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண