மது வாங்க பணம் தர மறுத்ததால் பெண்ணின் மூக்கை அறுத்துள்ளார் லிவ்விங் டுகெதரில் வாழ்ந்து வந்த ஒருவர். இந்த கொடூரச் சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.


மத்தியப் பிரதேசத்தில்  40 வயது நபர் ஒருவர் மதுபானம் வாங்குவதற்கு பணம் தர மறுத்ததால், சனிக்கிழமை காலை தனது  லிவ்-இன் பார்ட்னரின் மூக்கை கோடரியால் அறுத்துள்ளார். லவ் குஷ் படேல் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் படிக்க: வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை துப்பாக்கி முனையில் வன்கொடுமை செய்த காவலர்.. உ.பியில் பயங்கரம்!


மத்தியப் பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 35 வயது பெண்ணின் மூக்கை அவரது 40 வயது லிவ்-இன் பார்ட்னர் கோடரியால் வெட்டினார். குற்றம் சாட்டப்பட்டவர் மது வாங்குவதற்கு பணம் தர மறுத்ததால், அவரது லிவ்-இன் பார்ட்னர் இந்த கொடூரச் செயலை செய்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். watch video | உசிலம்பட்டியில் பெண் சிசுக்கொலையா? - தலைமறைவான பெற்றோர்களால் பரபரப்பு


பட்டேல் கடந்த இரண்டு வருடங்களாக சோனுவுடன் லிவ்விங் டுகெதர் உறவில் இருந்துள்ளார். இந்த நிலையில், சனிக்கிழமை காலை, மது வாங்க ரூ.400 தரும்படி கேட்டுள்ளார். ஆனால், அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர், அங்கு கிடந்த கோடரியை எடுத்து சோனுவின் மூக்கை வெட்டினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


இதற்கிடையில் படேல் தப்பி ஓடிவிட்டார். சோனுவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து, படேல் மாலையில்  கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையி அடைக்கப்பட்டர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க: மொபைல் போனில் பேச தடை: வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி; காதலன் பலி...காதலி கவலைக்கிடம்!


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண