சென்னை தண்டையார் பேட்டை பகுதியிலுள்ள திலகர் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் 17 வயதான சீனா என்ற சீனிவாசன். இவர், நேற்று மதியம் 2 மணியளவில் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே ஷேர் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார்.


அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல்  சீனிவாசன் பயணித்த ஷேர் ஆட்டோவை வழிமறித்து அவரை கீழே இறக்கி, அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் அமரவைத்து அழைத்து சென்றுள்ளனர். 


மோட்டார் சைக்கிளானது புதுவண்ணாரப்பேட்டை மாதா கோவில் தெருவில் சென்றபோது, வாகனத்தில் இருந்து கீழே குதித்த சீனிவாசன் தப்பி ஓடியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தகும்பல் சீனிவாசனை விடாமல் ஓட ஓட விரட்டி கத்தியால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சீனிவாசன், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


மேலும் படிக்க : ‛ஹோண்டா கார் எண்ட்ரி... வழிநெடுக நன்றி... ஒரே நாளில் ஆல் பேமஸ் கண்ட்ரி’ ஆவடி அன்னபூரணி... அம்மா ஆன கதை!


இதையடுத்து, தகவலறிந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் கொலையான சீனிவாசனின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை குறித்து புதுவண்ணாரப் பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலை செய்த குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 


மேலும், காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலையான சீனிவாசன், நேற்று முன்தினம் இரவு தனது காதலியை கிண்டல் செய்ததாக அதே பகுதியை சேர்ந்த 18 வயதான பசுபதி என்பவரை தனது நண்பர்களுடன் சேர்ந்து தண்டையார் பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில் வைத்து அரிவாளால் வெட்டியுள்ளதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் பசுபதி ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பசுபதியின் உறவினர் உள்பட 5 பேர் சேர்ந்து, சீனிவாசன் தனியாக வந்தபோது அவரை கத்தியால் வெட்டிக்கொலை செய்ததாக விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது. 


 


‛தாமரையிடம் பிக்பாஸ் போகாதே என்றேன்...’ -தாமரைச்செல்வி கணவர் சாரதி திக் பேட்டி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


கோயில் கடைகள் ஏலத்தில் அரசியல் தலையீடு: அழுது கொண்டே வெளியேறி பெண் அதிகாரி!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண