தனது வீட்டில் வேலை செய்யும் மைனர் பெண்ணை அடித்து கொடுமைப்படுத்தி ஆடைகளை கழட்டி, வீடியோ எடுத்து பெண்னை போலீசார் கைது செய்தனர்.


மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள வெர்சோவா பகுதியில் உள்ள தனது வீட்டில் வேலைக்காக அமர்த்தப்பட்ட மைனர் பெண்ணை, பெண் ஒருவர் தாக்கி, ஆடையை கழற்றியுள்ளார். சிறுமி தனது சகோதரியிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியதைத் தொடர்ந்து, போலீசார் அந்தப்பெண்ணை கைது  செய்தனர்.


வெர்சோவா குடியிருப்பில் தனியாக தங்கியிருந்த 25 வயதான அந்தப்பெண், தான் ஒரு போராடும் நடிகை என்று கூறினார். அவரது வீட்டில் கடந்த நான்கு மாதங்களாக மைனர் பெண் வீட்டு வேலை செய்து வருகிறார். மேலும் படிக்க: பயிரை மேயும் வேலிகள்? சீரழிக்கப்படும் பிஞ்சுகள்... தீர்வுகள் என்ன?


அந்தப் பெண், சரியாக வேலை செய்யவில்லை என்று கூறி, மைனர் பெண்ணை பலமுறை தாக்கியுள்ளார். மைனர் பெண் ஆரம்பத்தில், தனது முதலாளியின் கைகளில் அனுபவித்த சித்திரவதைக்கு எதிராக புகார் செய்யவில்லை. 


இந்த நிலையில், கடந்த வாரம் அந்தப் பெண்,  சரியான நேரத்தில் வேலையை முடிக்கத் தவறியதால் மீண்டும் மைனர் பெண்ணை சித்திரவதை செய்துள்ளார்.


வேலை முடிவதில் தாமதம் ஏற்பட்டதால், மைனர் பெண்ணை தாக்கி, ஆடைகளை கழற்றுமாறு கட்டாயப்படுத்தியுள்ளாராம். அதன்பிறகு, சிறுமியின் படங்களை கிளிக் செய்து வீடியோக்களை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.மேலும் படிக்க: நடத்துனர் நடத்திய 4 வது திருமணம்... சிறுமி கர்ப்பம்... டிக்கெட் எண்ணியவர் இனி கம்பி எண்ணுவார்!


அத்துடன் சிறுமையை செருப்பால் அடித்து, அதன் மூலம் தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றார். அவரது சகோதரி காயம் குறித்து விசாரித்தபோது, ​​​​அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி சகோதரி உதவியுடன் போலீசில் புகார் அளித்தார். புகாரை பெற்ற வெர்சோவா போலீசார், குற்றவாளியை கைது செய்தனர்.


அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 326 (தாக்குதல்), 354 (பி) (உடையை அவிழ்க்கும் நோக்கத்துடன் பெண்ணைத் தாக்குதல் அல்லது குற்றவியல் சக்தியைப் பயன்படுத்துதல்) மற்றும் 504 (வேண்டுமென்றே அவமதித்தல்), போக்சோ ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க: விழுப்புரத்தில் கொடுமை.! காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கு மொட்டையடித்த பெற்றோர்!! 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண