பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து தினமும் பதிவாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது நாமக்கலில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. கணவரை இழந்து தனியாக இருந்த பெண் ஒருவரை நான்கு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


நாமக்கல் மாவட்டம் அன்பு நகரில் 29 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவர் இறந்துவிட்டதால் அப்பகுதியில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் கடந்த மே 19ஆம் தேதி தன்னுடைய ஆண் நண்பருடன் ஒரு பகுதியில் இரவு நேரத்தில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் நான்கு பேர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். 


அப்போது அவர்கள் இந்த இருவரிடமும் தகராறு செய்துள்ளதாக தெரிகிறது. அத்துடன் அப்பெண்ணின் ஆண் நண்பரை மிரட்டி அடித்துள்ளனர். மேலும் அவரை கட்டி போட்டு விட்டு அப்பெண்ணை தனியாக அழைத்து சென்று நான்கு பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. அத்துடன் அவர் அணிந்து இருந்த தங்க சங்கிலி மற்றும் அவரிடம் இருந்த பணம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்த 7000 ரூபாய் வரை இவர்கள் திருடி சென்றதாக தெரிகிறது. 


இந்தச் சம்பவம் தொடர்பாக அப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். வீசாணம் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார்(20), நவீன் குமார்(21) மற்றும் முரளி(21) ஆகிய மூன்று பேரை கைது காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய வல்லரசு என்பவர் தலைமறைவாக உள்ளதால் அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த மூன்று பேரிடமும் காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 


நாமக்கல் பகுதியில் இந்தக் கூட்டுபாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே விருதுநகர் மற்றும் வேலூரில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்ற சூழலில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்பட்டுள்ளது. 




மேலும் படிக்க:3 மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தால்... காதலன் வீட்டில் காதலி தூக்கிட்டு தற்கொலை!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண