100 ரூபாய் கடனை திருப்பிச் செலுத்துவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் இந்த கொலை நடந்துள்ளது.
மும்பையில் உள்ள கிர்காமில் 100 ரூபாய் திருப்பிச் செலுத்தியதற்காக 35 வயது நபர் ஒருவர் சிமென்ட் கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அவரது சக ஊழியரால் அந்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று மும்பை போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
Property Dispute: மூத்த மகனின் மனைவிக்கு சொத்தை எழுதி வைத்த தந்தை! தாயை கொலை செய்த இளையமகன்!
ராஜஸ்தானைச் சேர்ந்த அர்ஜுன் யஷ்வந்த் சிங் சர்ஹார், உள்ளூரில் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில், அவரது சக ஊழியரான மனோஜ் மராஜ்கோலே (36) என்பவரிடம் இருந்து 100 ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
கடந்த வியாழக் கிழமை இரவு இரண்டு பேரும் குடிபோதையில் 100 ரூபாய் கடன் தொடர்பாக தகராறு செய்தனர். இதன் பின்னர், மாதவ் பவன் வளாகம் அருகே சர்ஹர் தூங்கச் சென்றபோது, வெள்ளிக்கிழமை அதிகாலை சிமென்ட் கட்டையால் தலையில் அடித்துக் கொன்றுள்ளார். கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தி, பின்னர் மணி நேரம் கழித்து மாராஜ்கோலை கைது செய்தனர்.
மனோஜ் மராஜ்கோலே வரும் செவ்வாய்க்கிழமை வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று போலீஸ் அதிகாரி கூறினார். 100 ரூபாய் பணத்திற்காக ஒருவர் சக ஊழியரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்