தொடர் பாலியல் வன்கொடுமை புகார்களுக்குப் பிறகு கொச்சியில் டாட்டூ கலைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்


பச்சை குத்தும் கலைஞரான சுஜீஷ் மீதான தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமை புகார்களைத் தொடர்ந்து, கொச்சியில் மறைந்து இருந்த அவரை கேரள காவல்துறை சனிக்கிழமை இரவு அவரைக் கைது செய்தது.


இதுகுறித்து கொச்சி போலீஸ் கமிஷனர் நாகராஜு சகிலம்,  “அவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் டாட்டூ ஸ்டுடியோவில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை சமூக வலைதளங்களில் 18 வயது இளம்பெண் கூறியதை அடுத்து அவர் கடந்த 4 நாட்களாக தலைமறைவாக இருந்தார். அவர் மீது மேலும் புகார்கள் வரும் என  எதிர்பார்க்கிறோம். சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும். இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்துள்ளோம். குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, அவர் தனது ஸ்டுடியோவை மூடிவிட்டு தலைமறைவானார். எங்கள் குழுக்கள் அவரது நடமாட்டத்தைக் கண்காணித்து, சனிக்கிழமை இரவு அவரைக் கண்காணித்தனர்” என்று அவர் கூறினார்.


கடந்த வாரம் 18 வயது சிறுமி ஒருவர் ஸ்டுடியோவில் தனது கசப்பான அனுபவத்தை கூறியுள்ளார். அதில், "என்னால் உணர முடியவில்லை" என்ற தலைப்பில் பதிவிட்டதை அடுத்து சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து, அந்த நபரின் ஸ்டுடியோவை போலீஸார் சனிக்கிழமை சோதனை செய்து, லேப்டாப்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற பதிவுகளை கைப்பற்றினர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் துறைமுக நகரத்தில் உள்ள அனைத்து டாட்டூ ஸ்டுடியோக்களிலும் போலீசார் ஆய்வு செய்து பணியாளர்கள் மற்றும் அவர்களின் விவரங்களை சேகரித்தனர். 




தனது கசப்பான கதையை விவரித்த பாதிக்கப்பட்ட பெண், “ஒரு வாரத்திற்கு முன்பு பச்சை குத்துவதற்காக ஸ்டுடியோவுக்குச் சென்றேன். அங்கு அதிகம் கூட்டம் இருந்ததால், யாரும் இல்லாத தனியான இடத்தில் எனக்கு டாட்டூ குத்தப்பட்டது. டாட்டூ குத்திக்கொண்டே என்னை அவர் தொட நினைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, ​​அவர் எனது முதுகுத்தண்டில் ஊசியைப் போட்டு பாலியல் வன்கொடுமை செய்தார். அந்த மனிதனுக்கு இப்படிச் செய்யும் துணிச்சல் இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. நான் ஒரு வார்த்தை பேசவில்லை. நான் மிகவும் முட்டாளாக இருந்ததற்காக அந்த இடத்திலேயே இறக்க வேண்டும் என்று உணர்ந்தேன். நான் வெறுப்பாக உணர்ந்தேன்” என்று அவர் எழுதினார்.


குற்றம் சாட்டப்பட்டவர் பிரபலமான டாட்டூ கலைஞர் என்றும்,  வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சினிமா நடிகர்கள் மற்றும் பிற விஐபிகளுடன் இருக்கும் தனது புகைப்படங்கள் வைத்துள்ளதாகவும் கொச்சி போலீசார் தெரிவித்தனர்.


சிறுவயதில் ஆரம்பித்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் பச்சை குத்துவது இளைஞர்களிடையே ஒரு பெரிய ஃபேஷனாக மாறிய பிறகு அவர் வளர்ச்சி அடைந்தார். சமூக வலைதளங்களில் அவருக்கு 52,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருப்பதாகவும், புகார் எழுந்த பிறகு அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு செயல்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


பல மகளிர் உரிமை ஆர்வலர்கள், அந்த நபரால் பாதிக்கப்பட்ட பெண்கள்,  அவருக்கு எதிராக வெளியே வந்து புகார் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண