மதுரை மாவட்டம் மேலூர் அருகே 17 வயதுடைய இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த நாகூர் ஹனிபா என்ற இளைஞனுடன் மாயமானதாக கூறப்பட்ட நிலையில் அவர் மாயமானதாகவும், கடத்தி செல்லப்பட்டதாக கூறி பெண்ணின் பெற்றோர் மேலூர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இந்தநிலையில் அப்பெண் வீடு திரும்பிய நிலையில் அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடையவே, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துநிலையில் இன்று அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், ஏற்கனவே மேலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான நாகூர் ஹனிபாவை கைது செய்தனர். தொடர்ந்து, நாகூர் ஹனிபாவிற்கு துணையாக இருந்த மதுரையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை சென்னையில் வைத்தும், பெருமாள் கிருஷ்ணன், ராஜாமுகமது மற்றும் திருப்பூரைச் சேர்ந்த நண்பர் சாகுல் ஹமீது என்பவரை பல்லடத்தில் வைத்தும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், நாகூர் ஹனிபாவின் தாயார் மதினா பேகம், தாய்மாமா மனைவி, ரம்ஜான் பேகம் என்ற கண்ணம்மாள் மற்றும் அவரது உறவினர் ராஜாமுகமது த.பெ சுல்தான் அலாவுதீன் தும்பைப்பட்டி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில், மேலூர் சிறுமி உயிரிழப்பு தொடர்பாக மதுரை எஸ்.பி பாஸ்கரன் மேலூர் காவல்நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதைத்தொடர்ந்து மதுரை மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் 'ABP' செய்தி நிறுவனத்திற்கு அளித்த தகவலில் “மேலூர் சிறுமி வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 2 பேர் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்