மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் தனது 17 வயது மகளை கள்ளக்காதலனுக்கு இரையாக்கிய தாயை போலீசார் கைது செய்தனர். 40 வயது பெண் தனது 52 வயது கள்ளக்காதலனுக்கு உதவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைனர் பெண் அளித்த புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
சில காலத்திற்கு முன்பு, மைனர் பெண்ணின் தாயும் தந்தையும் தங்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். மைனர் பெண்ணும், அவரின் தம்பியும் தாயுடன் இருந்து வந்தனர். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அந்த நபர் தனது தாயுடன் பேசுவதற்காக அவர்களின் வீட்டிற்குச் சென்றார். அதே நாளில், மகனை உறவினர் வீட்டுக்கு அனுப்பினார். மேலும் படிக்க: பாலியல் வன்கொடுமையால் பிறந்த குழந்தை... அவமானத்தால் கொன்ற 15 வயது சிறுமி!
அப்போது, மைனர் பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டார். அதிர்ச்சியூட்டும் வகையில், அவரது தாயார் கள்ளக்காதலனின் ஆசைக்கு இணங்குமாறு மகளை வற்புறுத்தியுள்ளார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் அவரை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும், இதுகுறித்து யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என மிரட்டியும் உள்ளார். மாமியாருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரம் - சொந்த நண்பரை வெட்டிய மருமகன் கைது
இதனைத் தொடர்ந்து, கொடூரமான குற்றத்தை மறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மகளை ஒரு இளைஞருக்கு திருமணம் செய்து வைக்க அவரது தாய் முயன்றார். ஆனால், அந்தப்பெண் குழந்தை உதவி எண்ணிற்கு டயல் செய்து, தனக்கு நடந்த கொடூரம் குறித்து கூறியதை தொடர்ந்து அவர் மீட்கப்பட்டார்.
சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார், உரிய விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரது தாயார் மற்றும் அவரது கள்ளக்காதலனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மூன்று நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். Dowry Death | ''அவன் சரியில்லை'' : மீண்டும் கடிதம்.. கேரளாவில் மீண்டும் ஒரு வரதட்சணை தற்கொலை! விடாது தொடரும் துயரம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்