திருக்கோவிலூர் : 2 குழந்தைகளுக்கு பூச்சி மருந்து கொடுத்துவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை
திருக்கோவிலூர் அருகே 2 குழந்தைகளுக்கு பூச்சி மருந்து கொடுத்துவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் அருகே 2 குழந்தைகளுக்கு பூச்சி மருந்து கொடுத்துவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அம்மன் கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 32). இவரது மனைவி கவுரி (26) . இவர்களுக்க அருணா (3) பூமிநாதன் (11) என்று இரண்டு குழந்தைகள் உள்ளன. கணவன் ஏழுமலை கரும்பு வெட்டும் கூலி தொழில் செய்து வருகிறார். இவர் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டில் உள்ள மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
சென்னை: பள்ளி மாணவி தற்கொலை: கையில் வலி... தேர்வு எழுத முடியாத மன அழுத்தம் காரணமா?

Just In
இந்த நிலையில் இன்று கணவன் வேலைக்கு சென்ற பின் மனைவி கவுரி இரண்டு குழந்தைகளையும் அழைத்து கொண்டு தனது விவசாய நிலத்துக்கு சென்றுள்ளார். அங்கு தனது இரண்டு குழந்தைகளுக்கு முதலில் பூச்சி மருத்து கொடுத்துவிட்டு அருகே உள்ள பலா மரத்தில் கவுரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். அப்போது பூச்சு மருந்து குடித்த இரண்டு குழந்தைகளும் வலியில் அலறி உள்ளது. இந்த சத்தம் கேட்டு ஓடிவந்தவர்கள் கவுரி தூக்கில் தொங்கி நிலையில் கிடந்ததை கண்டு அதிச்சி அடைந்தனர்.
பின்னர், அருகில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 குழந்தைகளையும் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது குழந்தைகள் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. இதனை அறிந்த திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்த கவுரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours) State suicide prevention helpline – 104 (24 hours) iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்