திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த உள்ள ஆவணியாபுரம் கிராமத்தை சேர்ந்த டெய்லர் லோகநாதன். இவருடைய மனைவி வேண்டா இந்த தம்பதியினருக்கு கார்த்திகா வயது (15) ,சிரஞ்சீவி வயது (14) , நிறைமதி வயது (10) 2 மகள் 1 மகன் உள்ளனர். மேலும் அதே கிராமத்தில் அரசு பள்ளியில் கார்த்திகா 10-ம் வகுப்பும் சிரஞ்சீவி 9-ம் வகுப்பும் ,நிறைமதி 6-ம் வகுப்பு பயின்று வருகின்றனர்.அதனைத்த கடந்த 4 வருடங்களுக்கு முன்பு லோகநாதன் நோய்வாய்பட்டு இறந்துவிட்டார். 3 குழந்தைகளை வேண்டா 100 நாள் வேலைக்கு சென்று காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் வேண்டா சில நாட்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த 3-மாதங்களுக்கு முன்பு வேண்டா புற்றுநோயால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் வேண்டா சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இதனால் தற்போது கார்த்திகா, சிரஞ்சீவி, நிறைமதி ஆகிய 3 குழந்தைகளும் தங்களின் தட்டை வீட்டில் தனியாக வாழ்ந்து வருகின்றனர். உணவிற்கு மற்றவர்களிடம் கையேந்தும் நிலைமையிலும் உள்ளனர்.
இதுகுறித்து ABP NADUகுழுமத்தில் இருந்து கார்த்திகாவிடம் பேசுகையில்;
என்னுடைய தந்தை,தாய் உடல்நல குறைவால் அடுத்தடுத்து உயிரிழந்து விட்டார். தற்போது நாங்கள் ஆதரவு அற்று உள்ளோம் எங்களை அரவணைக்க யாரும் இல்லை, நாங்கள் 3 நபர்களும் மதியம் நேரத்தில் எங்கள் பள்ளியில் வழங்கும் சத்துணவை ஒரு வேளை சாப்பிடுகிறோம் மற்றும் வீட்டின் அருகில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களும் சில உதவிகள் செய்கின்றனர்.
தொடர்ந்து உறவினர்களிடம் உதவி கேட்க தயக்கமாக உள்ளதாகவும், பெற்றோரை இழந்த குழந்தைகள் தெரிவிக்கின்றனர். தற்போது பள்ளி இல்லாத நாட்களில் உணவுக்காக காத்திருப்போம். பசியின் வலியை அனுபவித்து வருகிறோம். இதேபோன்று எங்களால் தொடர்ந்து வாழ முடியுமா என்ற கேள்வி எழுகிறது. தண்ணீர் குடித்தால் கூட சிறிது நேரத்தில் எங்களுக்கு பசி எடுத்து விடுகிறது. நான் சிறிது நேரம் தாங்கிக்கொள்கிறேன். என்னுடைய சகோதரி,சகோதரர் பசியை தாங்கி கொள்ள முடியவில்லை அவர்கள் பசி என்று அழுகின்றனர் என்றார்
எங்களுடைய ஓட்டு வீடும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. வீட்டில் மழைகாலங்களில் மழை நீர் உள்ளே ஒழுகும் நாங்கள் மூவரும் தனியாக தான் உள்ளோம் மழைநீர் ஒமுகும் போது நாங்கள் மூவரும் மழை ஒழுகாத இடத்தில் விடிய விடிய உட்கார்ந்து கொண்டே உறங்குவோம். எங்களுக்கு எந்த வித பாதுகாப்பான வசதிகள் இல்லை, எப்போது ஓட்டு வீடு இடிந்து விழும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றோம்.
”நாங்கள் மூவரும் தனியாக வசித்து வருகிறோம். நாங்கள் மூவரும் படிக்க விரும்புகிறோம். நாங்கள் மேற்கொண்டு படிக்க தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உங்களுக்கு உதவிட வேண்டும். நாங்கள் கல்லூரி வரையில் படிப்பதற்கு உதவி செய்ய வேண்டும். மேலும் அரசு திட்டத்தின் மூலம், எங்களுக்கு ஒரு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தார். பெற்றோரை இழந்து நிற்கும் 3 குழந்தைகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு உடனடியாக பெற்றோரை இழந்து நிற்கும் குழந்தைகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கிராம பொதுமக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்