சென்னை அடுத்த கொருக்குப்பேட்டை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சிராணி. ஒப்பந்த துப்புரவு தொழிலாளி.  இவருடைய மகள் ஸ்டெபினா. இவர் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.  


ஸ்டெபினாவிற்கு கடந்த நில நாட்களுக்கு முன்பு, கையில் காயமடைந்துள்ளது. இந்நிலையில், நேற்று, அவருக்கு வலி அதிகமாக இருந்திருக்கிறது. அப்போது ஜான்சிராணி வீட்டில் இல்லை. உடனே அவர் தன் அம்மாவிற்கு போன் செய்து விவரங்களைக் கூறியுள்ளார். பின்னர், ஜான்சிராணி மகளைத் தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை எடுக்கவில்லை. விவரம் அறிய, தன் வீட்டிற்கு அருகில் உள்ளவர்களை அழைத்திருக்கிறார் ஜான்சி ராணி. அக்கம் பக்கதினர் ஜான்சி ராணி வீட்டிற்குச் சென்று பார்த்த போது, கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. அவர்கள் பதற்றத்துடன், கதைவை உடைத்து உள்ளே சென்று பார்த்தப்போது, ஸ்டெபினா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வந்தது.


ஸ்டெபினாவைக் காப்பாற்ற ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் முன்னரே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கையில் அடிபட்டதால் ஏற்பட்ட வலி மற்றும் தேர்வு எழுத முடியாது குறித்த மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்காலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆர்கே நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது.


 


 


மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours) State suicide prevention helpline – 104 (24 hours) iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண