வாட்ஸ்அப் அதன் பயனாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் அப்டேட்டாக ஃபேஸ்புக்கில் உங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸைப் பகிரும் வசதியும் இதில் உள்ளது. இந்த அம்சத்தைப் பற்றி ஏற்கெனவே உங்களுக்குத் தெரிந்திருக்காவிட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி உங்கள் வாட்சப் ஸ்டேட்டஸை ஃபேஸ்புக்கில் பகிரலாம்.
பேஸ்புக்கில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸைப் பகிர்வது எப்படி:
வாட்ஸ்அப்பைத் திறந்து ஸ்டேட்டஸ் பகுதிக்குச் செல்லவும். நீங்கள் இதுவரை ஸ்டேட்டஸ் வைக்காவிட்டால், ஸ்டேட்டஸை அப்டேட் செய்யவும். புதிய அல்லது பழைய ஸ்டேட்டஸைப் பகிர விரும்புகிறீர்களா என்பதைப் பொறுத்து, இங்கே இரண்டு ஸ்டேட்டஸ் பகிர்வு ஆப்ஷன்கள் இதில் இடம்பெறும். புதிய ஸ்டேட்டஸ் அப்டேட்டைப் பகிர விரும்பினால், அந்த ஸ்டேட்டஸுக்குச் சென்று, ஷேர் டு ஃபேஸ்புக் ஸ்டோரி என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கேயும் Facebook அதன் பயன்பாட்டைத் திறக்க அனுமதிக்கும்படி கேட்கப்படலாம். பேஸ்புக் பயன்பாட்டைத் திறக்க அதைக் கிளிக் செய்யவும். அதில் மேலும், நீங்கள் யாருடன் நிலையைப் பகிர விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வு செய்யவும். பின்னர் Share Now என்பதைத் தேர்ந்தெடுக்கவும்..
டெக்ஸ்ட் மெசேஜ் மட்டுமே அனுப்பும் வகையில் அறிமுகமான வாட்ஸப் இன்று பல அப்டேட்களுக்கு பிறகு மாற்றங்களையும் வசதிகளையும் கொண்டுள்ளது. அந்த வரிசையில், அடுத்து வரப்போகும் அப்டேட்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் குழுவிற்குள் போலிங் எனும் வாக்கெடுப்பை அனுமதிக்கும் புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறது. இது வாட்ஸ் அப் குழுவில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த புதிய வாட்ஸ்அப் அம்சம் பயனர்கள் தங்களுக்கு பொருத்தமான தலைப்புகளில் குழுவிற்குள் கருத்துக்கணிப்புகளை உருவாக்க அனுமதிக்கும் புதிய அப்டேட் ஆகும். பெரும்பாலும் இது முதலில் ஐஓஎஸ் பயனர்களுக்குக் கிடைக்கும் பின்னர் ஆண்ட்ராய்ட், மற்றும் டெஸ்க்டாப் வர்சனுக்கும் கிடைக்கும். ஆனால் இந்த அப்டேட் எப்போது வெளியாகும் என்ற தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
வாட்ஸ் அப் தனிப்பட்ட சாட்களில் இதை அறிமுகப்படுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை. அதானால்தான் வாட்ஸ் அப் குழுக்களுக்கு மட்டும் இது கொண்டுவரப்பட உள்ளது.
நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்கலாம், மற்றவர்கள் அதற்கு பதிலுக்கு வாக்களிக்கலாம். வாட்ஸ்அப் குழுக்களில் மட்டுமே கருத்துக் கணிப்புகள் கிடைக்கும். கேள்விகளும், பதில்களும் முழுவதுமாக என்கிரிப்டட் செய்யப்பட்டது. ஒரு வாட்ஸ் அப் குழுவில் உள்ளவர்கள் மட்டுமே வாக்கெடுப்பு மற்றும் முடிவுகளை பார்க்க முடியும்.
மெசேஜ் ரியாக்ஷன்..
இன்ஸ்டா மற்றும் பேஸ்புக்கில் இருப்பது போல மெசேஜ் ரியாக்ஷன் விரைவில் வாட்ஸ் அப்பில் வரவுள்ளது. மெசேஜுக்கு ரியாக்ட் செய்யும் வகையில் இந்த் அப்டேட் வரவுள்ளது. மேசேஜை அழுத்திப்பிடித்தால் சில எமோஜிக்கள் ஸ்கிரீனில் தெரியும். நாம் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அனிமேஷன் எமோஜிஸ்..
புதிய ஹார்ட் வகை அனிமேஷன் மாதிரியான எமோஜியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது வாட்ஸ் அப். தற்போது சிவப்பு நிற இதய எமோஜி மட்டுமே அனிமேஷன் மாதிரியான எமோஜியாக வரும். தற்போது வரவுள்ள அப்டேட்டால் இன்னும் பல எமோஜிக்கள் அனிமேட் வகையில் இருக்கும்.
போட்டோ, வீடியோ ப்ரிவியூ
டாக்குமெண்ட் வகை போட்டோ, வீடியோவை ஷேர் செய்தால் அதனை ஓபன் செய்யாமல் பார்க்க முடியாது. அதற்கான ப்ரிவியூ வராது. ஆனால் விரைவில் ப்ரிவியூ பார்க்கும் அப்டேட்டை வாட்ஸ் அப் கொண்டு வரவுள்ளது. இதன் மூலம் டாக்குமெண்ட் வகை வீடியோ, புகைப்படத்தை அனுப்பும் முன் ப்ரிவியூ பார்க்கலாம்.