சென்னை வண்ணாரப்பேட்டையில் 21 வயதான இளம்பெண் வசித்த வருகிறார். கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வரும் அந்த பெண் தனது 2 இரண்டரை வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தைக்கு கையில் அடிபட்ட காயத்துடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அந்த இளம்பெண் அழைத்துச் சென்றுள்ளார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்களுக்கு குழந்தையின் காயத்தைப் பார்த்தபோது சந்தேகம் எழுந்துள்ளது.
உடனே, குழந்தையின் தாயிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த மருத்துவர்கள் குழந்தைகள் நல ஆர்வலர்கள் குழுவிற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வண்ணாரப்பேட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல்துறையினர் நேரில் சென்று அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் குழந்தையின் தாய் முரண்பட்ட தகவல்களை ஆரம்பத்தில் கூறியுள்ளார். பின்னர், அவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணையில், கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வரும் அந்த பெண்ணுக்கு, அதே பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியது.
அந்த இளைஞர் அடிக்கடி இளம்பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து வந்துள்ளார். மேலும், இருவரும் உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர். அப்போது, அந்த குழந்தை அலறியுள்ளது. அடிக்கடி குழந்தை அழுதுவந்தால் குழந்தையின் தாய் குழந்தையை அடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.
இரண்டரை வயது குழந்தை என்றும் பாராமல் பிரம்பால் மிக கடுமையாக தாக்கியுள்ளார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காதலுடன் உல்லாசமாக இருந்தபோது குழந்தை அழுதுள்ளது. அப்போது, ஆத்திரத்தில் குழந்தையை சரமாரியாக அடித்துள்ளார். அதில் குழந்தையின் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. இதைக்கேட்ட போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து, அந்த குழந்தையை மீட்டு அரசு காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர், அந்த இளம்பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர். காதலனுக்காக இரண்டரை வயது குழந்தை என்றும் பாராமல் பெற்ற குழந்தையின் கையின் எலும்பை தாயே முறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : கள்ளக்காதல் விவகாரத்தில் காட்டுப்பகுதியில் பெண் வெட்டி கொலை; சாக்குப்பையில் சடலம் - காரணம் என்ன..?
மேலும் படிக்க : Crime: 6 வயது மகளுடன் தனியாக நின்ற தாய்! உதவி செய்வதாக காரில் ஏற்றி வன்கொடுமை செய்த கும்பல்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்