பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தற்போது மீண்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது. குழந்தை மற்றும் தாய் ஆகிய இருவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தின் ஹர்துவார் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெண் ஒருவர் தன்னுடைய 6 வயது மகளுடன் சாலையில் நின்று கொண்டுள்ளார். அப்போது இரவு நேரத்தில் தனியாக இருந்த இந்தப் பெண்ணிற்கு ஒருவர் காரில் ஏற்றி உதவி செய்துள்ளார். அந்த சமயத்தில் காரில் அந்த நபருடன் சில நண்பர்களும் இருந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் சேர்ந்து அப்பெண் மற்றும் அவருடைய 6 வயது மகள் ஆகிய இருவரையும் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் இருவரையும் அவர்கள் சாக்கடை அருகே தூக்கி வீசி சென்றதாகவும் தெரிகிறது. அதன்பின்னர் நினைவு வந்த பின்னர் அப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறை விசாரணை நடத்தினர். அதில் அவர் இரவு நேரத்தில் ஒரு மத வழிப்பாடு இடத்திற்கு செல்ல தனியாக சாலையில் நின்று கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார். அப்போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறியுள்ளார்.
அதில் அவர்களை காரில் ஏற்றிய நபருடைய சோனு என்பது மட்டும் தெரியவந்துள்ளது. மேலும் அந்தப் பெண் மற்றும் அவருடைய குழந்தை ஆகிய இருவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர்கள் இருவரும் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சோனு மற்றும் அவருடைய நண்பர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இரவு நேரத்தில் தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணிற்கு உதவுவதாக கூறி சிலர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 6 வயது குழந்தையையும் அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மீது போக்சோ பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்