மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீனத்தில் காவிரிக்கரை செல்லும் திருமஞ்சன வீதியில் ஆதீனகர்த்தர்களாக இருந்து மறைந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட குருமூர்த்தம் எனும் நினைவிடம் அமைந்துள்ளது. இந்த குருமூர்த்தத்தில் கடந்த 2 ஆம் தேதி 20 வது குருமகாசன்னிதானத்திற்கு குருபூஜை நடந்துள்ளது. 




உதகையில் தொடங்கியது கோடை விழா ; 2 ஆண்டுகளுக்கு பின் சுற்றுலா பயணிகள் உற்சாகம்..


அதன் பின்னர் நேற்று ஆதீன ஊழியர்கள் அங்கு சென்றபோது குருமூர்த்தத்தின் விமானத்திலிருந்த 1 கலசங்கள், முகப்புப் பகுதியில் உள்ள நுழைவாயிலின் மேல் பகுதியில் இருந்த 4 கலசங்கள் என மொத்தம் 5 கலசங்கள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் ஆதீன மேலாளரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.  




கரூர் : சிறப்பாக தொடங்கி நடக்கும் ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத கொடியேற்ற விழா


அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக ஆதீனத்தின் பொதுமேலாளர் கோதண்டராமன்   மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல் துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் செம்பு மற்றும் பித்தளை ஆகியவற்றால் செய்யப்பட்ட இந்த 5 கலசங்களின் மதிப்பு 50 ஆயிரம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. 




திருச்சி : விதவிதமாய், வித்தியாசமாய் தோசைகள்.. கலக்கும் திருச்சி ராகவேந்திரா அன்னபூரணி மெஸ்


கடந்த சில நாட்களாக தருமபுர ஆதீன பட்டிணப் பிரவேசம் நிகழ்ச்சியில் பல்லக்கு தூக்கும் நிகழ்விற்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கூறி பட்டிணப் பிரவேசம் நிகழ்வில் பல்லாக்கு தூங்கு அரசு தடை விதித்ததைத் தொடர்ந்த பல்வேறு இந்து அமைப்பினர், ஆதீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து கொண்டு வருகின்றன.




Breakfast to Government School Students: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு: முதலமைச்சர் ஸ்டாலினின் 5 அதிரடி அறிவிப்புகள்


மேலும் இந்த விவகாரம் சட்டசபையிலும் விவாத பொருளாக மாறிய நாடு முழுவதும் அனைவரது கவனமும் தருமபுர ஆதீனத்தின் பக்கம் திரும்பி உள்ளது. இந்த நிலையில் தருமபுர ஆதீனகர்த்தர்களாக இருந்து மறைந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட குருமூர்த்தம் எனும் நினைவிடத்தில் இருந்த கோபுர கலசங்கள் திருடு போய்யுள்ள சம்பவம் தருமபுரம் ஆதீனத்தின் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.