கரூர் மாவட்டம், மேட்டுத்தெரு பகுதியில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் தொடங்கப்பட்டு நடந்து வருகின்ற 15 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று கொடிமரத்திற்கு கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது.




நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலய மண்டபத்தில் ஆலயத்தின் பட்டாச்சாரியார் தலைமையில் கொடிமரத்திற்கு தேவையான பட்டாடை மற்றும் வஸ்திரங்களை தாம்பாளத்தில் வைத்து தலையில் சுமந்தவாறு ஆலயம் வலம் வந்த பிறகு சக்கரத்தாழ்வார் முன்னிலையில் ஆலய வாசலில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதைத்தொடர்ந்து பட்டாச்சாரியார் சுமந்து வந்த வஸ்திரங்களை கொடிமரத்திற்கு சாட்டப்பட்டு கொடியேற்ற விழா சிறப்பாக துவங்கியது.




அதைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு வண்ண மாலைகள் அணிவித்து சந்தனப்பொட்டு, ஆலயத்தின் பட்டாச்சாரியார் பல்வேறு நாமாவளிகள் கூறிய பிறகு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, மகாதீபாராதனை உடன் சித்திரை மாத கொடியேற்ற விழா சிறப்பாக தொடங்கியது.


கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X


மேட்டுத்தெரு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றம் நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.



நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலய செயல் அலுவலர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.