சென்னையை அடுத்து உள்ளது மீஞ்சூர். மீஞ்சூரை அடுத்த அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே உள்ளது செல்லியம்மன் கோவில் பகுதி. இந்தபகுதியில் நேற்று முன்தினம் இளம்பெண் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். மேலும், அவரது கழுத்து தாலிக்கயிற்றால் நெரிக்கப்பட்டு, அவர் உயிரிழந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இளம்பெண்ணின் சடலத்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பினர்.
பின்னர், போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அவர்களது விசாரணையில், உயிரிழந்த பெண் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த மீனா என்று தெரிய வந்துள்ளது. 20 வயதே ஆன மீனா அந்த பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கட்டிட பணியின்போது முத்தரசன் என்பவரை காதலித்து வந்த மீனா, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு முத்தரசனை திருமணம் செய்து கொண்டார்.
மேலும் படிக்க : நீதிமன்ற வளாகத்தில் காவலாளி தற்கொலை: காரணத்தை சொன்ன உருக்கமான கடிதம்!
இந்த நிலையில், நேற்று முன்தினம் முத்தரசனும், மீனாவும் வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளனர். ஆனால், இரவு நீண்டநேரமாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. மீனாவின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், விசாரணைக்காக முத்தரசனைத் தேடிச்சென்றபோது அவரும் வீட்டிற்கு திரும்பாததை கண்டறிந்துள்ளனர்.
இதனால், மனைவி மீனாவை காதல் கணவன் முத்தரசனே தாலிக்கயிற்றால் கழுத்த நெரித்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள 25 வயதே ஆன முத்தரசனை தேடும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருமணமான ஒரே வருடத்தில் மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே சம்பவத்தை போல, பூந்தமல்லியிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பூந்தமல்லி கிழக்கு மாடவீதி பள்ளி தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். வயது 30. இவரது மனைவி பெயர் நந்தினி. அவருக்கு வயது 27. இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்களில் இருவர் ஆண் குழந்தைகள். ஒருவர் பெண் குழந்தை ஆவர். இந்த நிலையில், நேற்று நீண்ட நேரமாகியும் வீட்டில் இருந்து நந்தினி வெளியே வரவில்லை. வீடும் பூட்டியே இருந்தது. இதனால், சந்தேகமடைந்த நந்தினி வீட்டுக்கு கீழ் குடியிருந்த நந்தினியின் சகோதரி பவித்ரா பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் அளித்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்றபோது, நந்தினி தாலியால் கழுத்து இறுக்கப்பட்டு, கட்டையால் பலமாக தாக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து, அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் நந்தினியின் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குழந்தைகளுடன் தலைமறைவான ஆனந்தராஜையும் போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க : குழந்தைகளுக்கு எதிரான சைபர் க்ரைம் குற்றங்கள் 400 சதவிகிதம் அதிகரிப்பு!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்