தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது அவர் அதிமுக நிர்வாகிகள் இல்ல திருமண விழாக்களில் பங்கேற்றார். மேலும், பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டுடார். நேற்று முன்தினம் திருவெண்காடு, திருக்கடையூர் ஆகிய கோயில்களில் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். 




நெருங்கும் ஆபத்து... Chrome OS, Mozilla Firefox பயனாளர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த மத்திய அரசு!


அதனைத் தொடர்ந்து, நேற்று காலை வைத்தீஸ்வரன் கோயிலில் முன்னாள் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி, பின்னர், சமீபத்தில் தமிழக அரசு தடை விதித்து பின்பு தடையை நீக்கி பல சர்ச்சைகளுக்கு நடுவே நடந்து முடிந்த பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு, சட்டசபையில் கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த எடப்பாடி பழனிசாமி  தருமபுரம் ஆதீனத்திற்கு சென்றார். 




Chennai: மொத்தமும் ஸ்கூல் ஃபீஸ்..! ரூ.20ஆயிரத்தை சூதாடி இழந்த கணவன்.. மனமுடைந்து மனைவி தற்கொலை!


அங்கு ஆதீன வாசலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு கோ பூஜை செய்தார்.  அதனைத் தொடர்ந்து அவர் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடி அருள் ஆசி பெற்றார். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் திருமண நிகழ்வு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வருகையொட்டி அவரை வரவேற்கும் விதமாக மயிலாடுதுறை நகரம் முழுவதும் அதிமுகவினர் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் அ.தி.மு.க. கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. 




மீண்டும் அதிகரிக்கத் தொடங்கும் கொரோனா! ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின்!


இந்த நிலையில் அரசு அனுமதி பெறாமல் டிஜிட்டல் பேனர் மற்றும் கொடிகள் கட்டியதாக முன்னாள் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க. மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் நாஞ்சில் கார்த்தி, நகர செயலாளர் செந்தமிழன் உள்ளிட்ட மூவர் மீது மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மயிலாடுதுறையில் அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிமுக நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Airways Jobs: இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு! உடனே அப்ளை பண்ணுங்க! இதுதான் விவரம்!!