குழந்தைகளின் கல்வி கட்டணத்திற்காக சிறுக சிறுக சேமித்து வைத்த ரூ.20 ஆயிரத்தை சூதாட்டத்தில் கணவன் தோற்றத்தால் மனம் உடைந்த மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


சென்னை நந்தம்பாக்கம் வடக்கு மாடவிதியை சேர்ந்தவர் 48 வயதான சுரேஷ்பாபு. இவர் ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார். சுரேஷ்பாபுக்கு குடி மற்றும் சூதாடும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இவரது மனைவி 46 வயதான் புவனேஷ்வரி தனியார் மருத்துவமனைக்கு சமையல் செய்து கொடுக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆன நிலையில் 2 மகன்கள் உள்ளனர். 


சுரேஷ்பாபு, ஆட்டோ ஓட்டி கிடைக்கும் பணத்தை வீட்டில் கொடுக்காமல் தினமும் சீட்டாடி அழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் சுரேஷ் பாபு. சீட்டாடுவதில் தோற்று குடிபோதையில் வீட்டுக்கு வருவது வழக்கம். பிறகு மனைவியிடம் சண்டைபோட்டு சூதாட பணம் கேட்டு தகராறு செய்வார்.




இதன் காரணமாக, புவனேஷ்வரி குடும்பத்தை நடத்த முடியாமல் கடும் அவதிப்பட்டு வந்துள்ளார். இருப்பினும் புவனேஸ்வரிக்கு அவரது தந்தை ராஜேந்திரன் பக்க பலமாக இருந்து பல உதவிகளை செய்துள்ளார்.


இந்நிலையில், நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டுக்கு வந்த சுரேஷ் பாபு மனைவியிடம் தகராறு செய்து விட்டு பிள்ளைகளின் கல்வி கட்டணத்திற்காக சிறுகசிறுக புவனேஷ்வரி சேர்த்து வைத்திருந்த 20 ஆயிரத்தை எடுத்துச் சென்றுள்ளார். இதை கவனித்த புவனேஸ்வரி தடுத்து நிறுத்தி அந்த பணத்தை பிடுங்க முயற்சித்துள்ளார். ஆனால் சுரேஷ் பாபு அவரை வலுக்கட்டாயமாக பிடித்து கீழே தள்ளி விட்டு வெளியே சென்றுவிட்டார்.




குழந்தைகளின் கல்வி கட்டணத்திற்கு சேர்த்து வைத்த மொத்த பணமும் போய்விட்டதே என தரையில் விழுந்து புவனேஷ்வரி புரண்டு கதறி அழுதுள்ளார். மேலும், அந்த பணத்தை கணவன் சூதாட்டத் தில் தோற்றுவிட்டதை அறிந்த புவனேஷ்வரி மேலும் மனமுடைந்துள்ளார்.


இந்நிலையில், குழுந்தையை அருகில் விளையாட அனுப்பி விட்டு மின்விசிறியில் துப்பட்டாவால் புவனேஷ்வரி தூக்கிட்டுக்கொண்டார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை கீழே இறக்கி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், புவனேஷ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 


தகவலறிந்த நுங்கம்பாக்கம் போலீசார் புவனேஷ்வரியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கணவர் சுரேஷ் பாபுவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  நந்தம்பாக்கத்தில் கணவனின் சூதாட்டத் தால் குடும்ப தலைவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்ப வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண