இந்திய விமானப்படை பொது நுழைவுத்தேர்வுக்கான (AFCAT 2/2022) பதிவுவினை தொடங்கியுள்ளது. இதன்படி, இந்தத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவினை ஜூன் 1, 2022 முதல் தொடங்கி இம்மாதம் இறுதி வரை அதாவது ஜூன் 30, 2022 மாலை 5 மணிக்கு முடிவடையும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளமான afcat.cdac இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு
இந்திய விமானப்படை (IAF) விமானப்படை பொது நுழைவுத்தேர்வுக்கான (AFCAT 2022) அறிவிப்பை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. விமானப்படையில் சேர்ந்து பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள், 1 ஜூன் 2022 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள (iaf recruitment 2022) விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க, IAF-யின் அதிகாரப்பூர்வ இணையத்தளங்களான careerindianairforce.cdac.in அல்லது afcat.cdac.in ல் விண்ணப்பிக்கலாம்.
இந்த தேர்வின் மூலம், இந்திய விமானப் படையில் பறக்கும் கிளை மற்றும் தரைப் பணி (தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத) துறைகளில் ஆட்சேர்ப்பு (AFCAT 2 Recruitment 2022) செய்யப்படுகிறது. இதனுடன், மெட்ராலஜி கிளையில் மெட்ராலஜி நுழைவு மற்றும் பறக்கும் கிளையில் NCC சிறப்பு நுழைவுக்கான ஆட்சேர்ப்பும் இருக்கும்.விண்ணப்ப காலம் ஜூன் 1, 2022 அன்று தொடங்கி ஜூன் 30, 2022 அன்று முடிவடைகிறது.
விமானப்படை பொது நுழைவுத் தேர்வின் வினாத்தாள் 300 மதிப்பெண்கள் கொண்டதாக இருக்கும். அதில் 100 கேள்விகள் கேட்கப்படும். இந்த கேள்விகள் பொது விழிப்புணர்வு, ஆங்கிலத்தில் வாய்மொழி திறன், எண் திறன், பகுத்தறிவு, ராணுவ திறன் போன்ற பாடங்களில் இருந்து இருக்கும். தேர்வர்களுக்கு தேர்வுக்கு 2 மணி நேரம் 45 நிமிடங்கள் வழங்கப்படும். இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, AFCAT 2/2022 தேர்வு ஆகஸ்ட் 26 முதல் ஆகஸ்ட் 28, 2022 வரை ஆன்லைன் முறையில் நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வு இரண்டு ஷிப்டுகளாக (AFCAT 2022 application process) நடத்தப்படும். அதன்படி, காலை 7:30 மணிக்கு முதல் ஷிப்ட் தொடங்கும். இரண்டாவது ஷிப்ட் மதியம் 12:30 மணிக்கு தொடங்கும்.
இந்த அறிவுப்பின் மூலம் மொத்தம் 271 வெவ்வேறு பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளது. அவற்றில் 246 ஆண்களுக்கும், 25 பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வின் மூலம், இந்திய விமானப்படையில் பறக்கும் கிளை மற்றும் தரைப் பணி (தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத) துறைகளில் பணியிடங்கள் நிறப்பப்படுகின்றன.
விண்ணப்பக்கட்டணம்
ஏர்ஃபோர்ஸ் காமன் அட்மிஷன் தேர்வுக்கு (Indian Air Force Recruitment 2022) விண்ணப்பிப்பதற்கான அனைத்துப் பிரிவினருக்கும் பதிவுக் கட்டணம் ரூ. 250 (திரும்பப் பெறப்படாது). டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு / இன்டர்நெட் பேங்கிங் மூலம் கட்டணத்தினை செலுத்தலாம்.
கல்வித்தகுதி
கல்வித்தகுதி கணிதம் மற்றும் இயற்பியலில் 50% மதிப்பெண்களுடன் இரண்டாம் PUC / 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 60% மதிப்பெண்களுடன் பொறியியல் பட்டம் அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01-07-2023 அன்று 24 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான தொடக்கத் தேதி: 01-06-2022. விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30-06-2022 தேர்வு தேதி: விரைவில் வெளியிடப்படும். பயிற்சி ஜூலை 2023ல் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். NCC சிறப்பு நுழைவு தேர்வர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. 2023 ஆம் ஆண்டு தொடங்கவுள்ள ஏர்ஃபோர்ஸ் பாடநெறி, விமானப்படையின் பொது நுழைவுத்தேர்வு, அதிகாரி நுண்ணறிவு மதிப்பீடு தேர்வு மற்றும் படம் உணர்தல், கலந்துரையாடல், உளவியல் தேர்வு, குழுத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர் தேர்வு இருக்கும்.
பறக்கும் அதிகாரி பதவிக்கு ரூ.56100 முதல் ரூ. 1,77,500 (நிலை 10) சம்பளமும் வழங்கப்படும்.