பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நாள்தோறும் ஏதேனும் ஒரு இடத்தில் நடத்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் குழந்தைகள் பெரும்பாலும் தங்களுக்கு நன்கு அறிந்த நெருக்கமான நபர்களால் தான் பதிப்பை சந்திக்கின்றனர். அதுவும் மாதா, பிதா, குரு என்று சொல்லக்கூடிய ஆசிரியர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்நிலையில் இதுபோன்ற சம்பவம் ஒன்று மயிலாடுதுறை அருகே நடைபெற்று உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 53 வயதான கோவிந்தராஜ். இவர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த சூழலில் கோவிந்தராஜ் பணியாற்றும் பள்ளியில் 4 -ஆம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுமிகள் உள்ளிட 3 குழந்தைகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அந்த சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி ஒருவரின் தாயார் இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகவள்ளி, உதவி ஆய்வாளர் புஷ்பலதா மற்றும் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 22 -ம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆசிரியர் கோவிந்தராஜ் தலைமறைவானார். தொடர்ந்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியர் கோவிந்தராஜை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் ஆசிரியர் கோவிந்தராஜை இன்று கைது செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பள்ளி ஆசிரியரால் பள்ளி குழந்தைகள் பாலியல் இன்னலுக்கு ஆளான சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
TN Rain Alert: அடுத்த 7 நாட்களுக்கு தொடரும் மழை.. எந்த பகுதிகளில்? இன்றைய வானிலை நிலவரம் இதோ..