பூம்புகார் அருகே இறால் குட்டைகளில் மர்ம நபர்கள் விஷம் கலந்ததால் 40 லட்சம் மதிப்பிலான இறால்கள் செத்து மிதப்பது குறித்து பூம்புகார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயமும் மீன்பிடித் தொழிலும் பிரதானமாக இருந்து வருகிறது. மேலும் மாவட்டத்தில் இறால் குட்டை அமைக்கப்பட்டு இறால் பண்ணைகள் அதிக அளவில் செயல்படுகிறது. இதனால் இப்பகுதியில் இருந்து அதிக அளவில் இறால் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டு, அதிக அளவில் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. 


Today Movies in TV, November 13: இன்னைக்கும் லீவுதானே.. கொஞ்சம் டிவியில என்ன படம் போடுறான்னு பாருங்க..!




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காவிரிப்பம்பட்டினம் ஊராட்சி பூம்புகார் காவிரி சங்கமத்துறை அருகே 150 க்கும் மேற்பட்ட இறால் குட்டைகள் அமைந்துள்ளன. இவற்றிற்கு நடுவே மந்தகரையை சேர்ந்த  தனமூர்த்தி  என்பவருக்கு சொந்தமான இரண்டு இறால் குட்டைகள் உள்ளன.  இந்த சூழலில் தன மூர்த்தியின் இறால் குட்டையில் நேற்று இறால் இறந்து  மிதந்துள்ளது. மர்ம நபர்கள் விஷம் கலந்ததாக கூறப்படுகிறது.  இதனை அடுத்து குட்டையில் வளர்க்கப்பட்ட இறால்கள் டன் கணக்கில் செத்து மிதந்தன இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தன மூர்த்தி இது குறித்து பூம்புகார் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தார்.


Actor Vijay: “நவம்பர் 13 ஆம் தேதி” .. நடிகர் விஜய்யின் சினிமா கேரியரில் மிக முக்கியமான நாள்.. ஏன் தெரியுமா?




தனமூர்த்தியின் பேரின் பேரில் பூம்புகார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு விஷ பாட்டில் ஒன்று கிடந்துள்ளது. அதனை கைப்பற்றி காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த இரண்டு  குட்டைகளிலும் விஷம் கலந்ததால் இறந்த இறால்களின் மதிப்பு சுமார் 40 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவம் அருகில் உள்ள மற்ற இறால் பண்ணை உரிமையாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.


Diwali 2023: பட்டாசு நேரம்.. விதிமீறல்.. 581 பேர் மீது போடப்பட்ட வழக்கு...சென்னை காவல்துறை அதிரடி!