பல்வேறு காரணங்களால் வனப்பகுதிகளில் அழிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் யானைகள், புலி, சிறுத்தை, மான், மயில் உள்ளிட்ட வன உயிரினங்கள் வனப்பகுதிகளைவிட்டு புலன் பெயர்வது தொடர் கதையாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக மயில்கள் அதிகளவில் தமிழ்நாடு முழுவதும் வனங்களை விட்டு வெளியேறி வனப்பகுதி அல்லாத ஊர்களில் தஞ்சம் அடைந்துள்ளது. மேலும் இவைகள் வயல்வெளிகளில் சுற்றி திரிந்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த எழுமகளூர் கிராமம் அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் விவசாயி 33 வயதான ஜெயசீலன். இவர் அதே கிராமத்தில் சொந்தமான விவசாய நிலம் வைத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் அவரது விவசாய நிலத்தில் மூன்று மயில்கள் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த மூன்று மயில்களை கைப்பற்றி வயலின் உரிமையாளர் ஜெயசீலனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் சிறையில் அடைத்துள்ளனர்.
Rahul Gandhi Defamation Case: மோடி குறித்து அவதூறு பேச்சு.. ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை...!
தொடர்ந்து நடத்திய விசாரணையில் விளைநிலத்தில் பூச்சிகளை அழிக்க பயன்படுத்தும் குருனை மருந்தினை மயில்கள் உண்டு இறந்ததாகவும், இதனால் விளைநிலத்தின் உரிமையாளரான ஜெயசீலன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சீர்காழி வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். இதனை அறிந்த ஜெயசீலன் உறவினர்கள் தங்கள் கிராமத்தில் சாராய விற்பனையை ஜெயசீலன் தடுத்ததாகவும், பாதிக்கப்பட்ட சாராய வியாபாரி மணிவண்ணன் என்பவர் திட்டமிட்டு மயில்களை கொன்று ஜெயசீலன் வயலில் வீசி சென்றதாகவும், இதனை முறையாக விசாரணை செய்யாமல் விவசாயி ஜெயசீலன் மீது வனத்துறையினர் பொய்யான வழக்கு பதிவு செய்ததாக கூறி அவரை விடுதலை செய்ய வேண்டும் என சீர்காழி வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் மற்றும் காவல் ஆய்வாளர் சிவகுமார் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வனத்துறை அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுனர். அப்போது காலையில் வயலுக்கு சென்று பார்த்தபோது மயில் ஏதும் இறந்து கிடைக்கவில்லை என விவசாயி ஜெயசீலன் கூறியும், அதனை வனத்துறை அதிகாரிகள் ஏற்றுகொள்ளமால் வழக்கு பதித்தாக சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லமோக் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இச்சம்பவம் ‘கடைசி விவசாயி’ திரைப்பட போன்று நடைபெற்று விடுமோ என்ற அச்சம் சக விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்