மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சூரக்காடு  பகுதியில் அமைந்துள்ளது கூப்பிடுவான் உப்பனாறு. இந்த ஆற்றில் ஆற்றை சுகாதாரத்தை கெடுக்கும் வகையில் ஆடு, கோழி, மாடு ஆகிய இறைச்சி கழிவுகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டு வருகிறது. மேலும், இறந்த கால்நடைகளையும் ஆற்றின் உள்ளே வீசி சென்ற அவலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அவ்வழியே சாலைகளில் செல்வோர் அவதியடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகளும் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இறைச்சி கழிவுகள் ஆற்றில் கலப்பதால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.


Actor Surya: சாதி மதத்தை கடந்தது கல்வி மட்டுமே, வீண் பழி சொன்னால் கண்டுக்க வேண்டாம் - நடிகர் சூர்யா அட்வைஸ்


சீர்காழி நகர்பகுதியில் இருந்து நள்ளிரவு நேரங்களில் இறைச்சி கழிவுகளை பலர் இங்கு வந்து கொட்டிச்செல்வதால் அதனை தடுக்க முடியாமல் இப்பகுதி மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருவதாக தெரிவிக்கின்றனர். சாதாரண மழை பெய்தால் கூட ஒட்டு மொத்த கழிவுகளும் ஆற்றில் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளதால் இந்த தண்ணீரை நம்பியுள்ள  கரையோர கிராம மக்களின் நீர் ஆதாரமும் கேள்விக்குறி ஆகியுள்ளது. இதனால் 30 கோடியில் தடுப்பணை கட்டியும் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 


Entertainment Headlines July 16: கண்கலங்கிய சிவகுமார்.. மகளை பாராட்டிய ஷங்கர்.. இன்றைய சினிமா செய்திகள்...!




இந்த தண்ணீரை பருகும் கால்நடைகள் நோய் தொற்றுக்கு உள்ளாகி வருவதாகவும், கரையோர கிராமங்களில் நிலத்தடிநீர் பாதிக்கபட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே பொதுபணித்துறை அதிகாரிகள் இது குறித்து உரிய ஆய்வு செய்து சூரக்காடு கூப்பிடுவான் உப்பனாற்றில் இறைச்சி கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.