குத்தாலத்தில் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர் வீட்டில் புகுந்து அவரை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி 20 ஆயிரம்  ரூபாய் பணம் பறித்து கொண்டு தப்பியோடிய அடையாளம் தெரியாத நபர்களின்  சிசிடிவி காட்சிகள் வெளியாகிய நிலையில், 2 சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


ஓய்வு பெற்ற தமிழாசிரியர் வீட்டில் கொள்ளை


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் புது நகரை சேர்ந்தவர் 90 வயதான கலைவேந்தர். ஓய்வு பெற்ற தமிழாசிரியர். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை  எழுதியுள்ள இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 7 -ம் தேதி பட்டப்பகலில் அடையாளம் தெரியாத நபர்கள் ஆசிரியர் வீட்டின் உள்ளே புகுந்து கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கி விட்டு பீரோவில் இருந்த  20 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 


Sitaram Yechury Health: செயற்கை சுவாசம், சீதாராம் யெச்சூரி கவலைக்கிடம் - மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?




இரண்டு சிறுவர்கள் கைது


அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து கலைவேந்தர் குத்தாலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் குத்தாலம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுனர். மேலும் அவர்கள் சிசிடிவி கேமரா,  காட்சிகளின் அடிப்படையில் தமிழாசிரியரை தாக்கிவிட்டு பணத்தை திருடிச்சென்ற குத்தாலம் பஞ்சுக்கார செட்டித்தெருவை சேர்ந்த 28 வயதான விக்னேஷ், மற்றும்  சிறுவர்கள் 15 மற்றும் 14 வயதுடைய 2 பேரை உட்பட மூன்று பேரை கைது செய்தனர்.


Teachers Strike: 31 அம்சக் கோரிக்கை; ஆசிரியர்கள் போராட்டம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் கருத்து என்ன?




இளைஞருக்கு வலை வீச்சு


தொடர்ந்து மூவரையும் மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்றத்தில் மூவரையும் ஆஜர் படுத்தி, சிறுவர்கள் இருவரையும் தஞ்சை சீர்திருத்த பள்ளியிலும், விக்னேஷ்சை மயிலாடுதுறை கிளை சிறையிலும் அடைத்த காவல்துறையினர் மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவான அஜய் என்ற இளைஞரை தீவிரமாக தேடிவருகின்றனர்.


75 years of DMK : “தெற்கிலிருந்து உதித்த சூரியன் – அண்ணா எனும் பேராயுதம்” திமுக உருவான வரலாறு..!




அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்


தமிழகத்தில் பல இடங்களில் கடந்த சில மாதங்களாகவே ஏராளமான திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே நாள்தோறும்  இருந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். காவல்துறையினர் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை அவ்வப்போது பிடித்து கைது செய்து சிறையில் அடைத்து வந்ததாலும் குற்றச்செயல்கள் குறைந்தபாடில்லை, எல்லாவற்றிக்கும் மேலாக குற்றச்செயல்களில் வயது வித்தியாசம் இன்றி சிறுவகள் முதல் முதியவர்கள் வரை ஈடுபடுவது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.


School Holidays: ஐ..ஜாலி: பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்கள் அதிகரிப்பு; திருத்திய நாட்காட்டி வெளியீடு!