Sitaram Yechury Health: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு, செயற்கை சுவாசம் உதவ்யுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


சீதாராம் யெச்சூரி கவலைக்கிடம்:


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “"இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி, டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சுவாசக் குழாய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சுவாச ஆதரவில் உள்ளார்.  அவரது உடல்நிலையை பல ஒழுங்குமுறை மருத்துவர்கள் குழு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, அவரது உடல்நிலை இந்த நேரத்தில் ஆபத்தான நிலையில் உள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டால், அதன் பிறகு உயிர் பிழைப்பது என்பது கடினம் என பரவலான கருத்து நிலவுதால், சீதாராம் யெச்சூரி மீண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.






தொடர் சிகிச்சையில் சீதாராம் யெச்சூரி:


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் யெச்சூரி,  ஆகஸ்ட் 19ஆம் தேதி நிமோமியா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஒரு புதுப்பிப்பில், அவர் சுவாசப் பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வருவதாக கட்சி சார்பில்  தெரிவிக்கப்பட்டது.  72 வயதான அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வரும் பலதரப்பட்ட மருத்துவர்கள் குழுவிடமிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக வெளியாகியுள்ள அறிக்கை,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சீதாராம் யெச்சூரி விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.


இதையும் படியுங்கள்: BYD eMax 7: போட்டியே இல்ல..! புதிய பெயரில் களமிறங்கும் BYD e6, eMax 7 காரின் அம்சங்கள் என்ன?


யார் இந்த சிதாராம் யெச்சூரி?


72 வயதான சீதாராம் யெச்சூரி சென்னையில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவரது பெற்றோர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். மாணவ பருவத்தில் இருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்து வரும் சீதாராம் யெச்சூரி,  மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து பல முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தொடர்ந்து மூன்று முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.