காவல்துறையினர் மீதும் அவர்கள் பணி தொடர்பாகவும் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வந்தாலும், அவர்கள் பொதுமக்கள் மத்தியில் பாராட்டு பெரும் வகையிலும் பல வீர தீர செயல்களிலும், மனிதாபிமான செயல்களிலும் ஈடுபட்டு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளையும் மறுபுறம் பெற்று வருகிறார்கள் என்றால் அது மிகையாகாது. அதுபோன்ற ஒரு செயல் மூலம் பொது மக்களிடம் பாராட்டை பெற்று வருகிறார் மயிலாடுதுறையை சேர்ந்த பெண் காவலர் ஒருவர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பட்டமங்கல தெருவில் போட்டோ ஸ்டுடியோ ஒன்றில், உளுத்துக்குப்பை கிராமத்தை சேர்ந்த 38 வயதான ராஜகுமாரி என்பவர் வேலை பார்த்து வருகிறார். 





இந்நிலையில் அந்த ஸ்டுடியோவுக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ராஜகுமாரியிடம் பக்கத்து கடை பூட்டி இருக்கிறது. எப்போது வருவார்கள் என்று விசாரித்துவிட்டு குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.  தண்ணீர் கொடுத்த போது அவர் கையில் வைத்திருந்த மணலை ராஜகுமாரி முகத்தில் அடித்து விட்டு அவரின் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி தாலி செயினை அறுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவம் அறிந்து அங்கு விரைந்து வந்த மயிலாடுதுறை காவல்துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.


Vijay Speech: "நாளைய வாக்காளர்கள் நீங்கள்.. ஓட்டுக்கு காசு வாங்காதீங்க.." மாணவர்கள் மத்தியில் அரசியல் பேசிய விஜய்...!




அப்போது, தாலி செயினை பறித்துக் கொண்டு ஓடிய அடையாளம் தெரியாத நபர், நேற்றிரவு போலீசார் ரோந்து பணியின் போது சந்தேகத்தின் பெயரில் விசாரணை செய்யப்பட்ட நபர் என்பது தெரியவந்தது.  உடனடியாக போலீசார் மயிலாடுதுறை நகரில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை உளவு பிரிவு பெண் தலைமை காவலர் கோப்பெருந்தேவி ரயிலடி ரோட்டில் சென்ற திருடனை அடையாளம் கண்டு மடக்கி பிடித்தார். அப்போது தப்பி ஓடிய அவனை இரண்டு இளைஞர்கள் உதவியுடன் மடக்கி பிடித்தார். தொடர்ந்து போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து 4 சவரன் தாலி செயினை பறிமுதல் செய்தனர்.


Vijay Gifted Diamond necklace :600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்த நடிகர் விஜய்




மேலும், அவனிடம் நடத்திய விசாரணையில்  கூறைநாடு திருமஞ்சன வீதியைச் சேர்ந்த 28 வயதான ரஜாக் என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கடையில் புகுந்து தாலி செயினை அறுத்துகொண்டு தப்பி ஓடிய திருடனை ஒரு மணி நேரத்தில் மயிலாடுதுறை காவல்துறையினர் பிடித்து நகையை மீட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் தன்னந்தனியாக இளைஞர்கள் உதவியுடன் திருடனை பிடித்த தனிப்படை தலைமை காவலர் கோப்பெருந்தேவிக்கு சமூக வலைதளத்தில் பொதுமக்களின் பாராட்டுகள் குவிந்து வருகிறது.


Vijay Makkal Iyakkam: ”உங்களை பார்த்தால் பாரதியாரின் கவிதை நினைவிற்கு வருகிறது” - விஜயை நெகிழ வைத்த மாணவி!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண