Vijay Makkal Iyakkam: நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 234 தொகுதிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. 


மொத்தம் ஆயிரத்து 404 மாணவ மாணவியர்களுக்கு விருது வழங்கும் விழா நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய், மாணவ மாணவியருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். அப்போது மாணவி ஒருவர், நடிகர் விஜயிடம் பேசினார். அவர் பேசியதாவது, “ உங்கள் திரைப்படத்தின் ரிலீஸ் தேதிகள் மாறும் போது மனதிற்கு மிகவும் கவலையாக இருக்கும். திரைப்படம் வெளியான பின்னர் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிடும். இது தான் நீங்கள் அவர்களுக்கு கொடுத்த பதில். இதனைப் பார்க்கும் போது பாரதியாரின் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ கவிதை தான் நினைவுக்கு வரும் என கூறினார். மேலும் அந்த மாணவி, தனது வெற்றிக்கு பெற்றோர்கள் முக்கிய காரணம் வகித்தார்கள், அவர்களுக்கும் சால்வை அணிவிக்க முடியுமா என கேட்டார், இதற்கு நடிகர் விஜய் உடனே அந்த மாணவியின் பெற்றோரகளுக்கும் சால்வை அணிவித்தார்.