நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா நீலாங்கரையில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக உதவித்தொகையும், சான்றிதழ்களையும் நடிகர் விஜய் வழங்கி வருகிறார்.

Continues below advertisement

நடிகர் விஜய்யின் இந்த நடவடிக்கை அரசியல் கட்சி தொடங்குவதற்கான நகர்வு என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மாணவர்களுடன் நடிகர் விஜய் சந்திப்பது இதுவே முதன்முறை என்பதாலும், இந்த விழா நேரலையில் ஒளிபரப்பானதாலும் நடிகர் விஜய் மிகவும் கவனத்துடன் பேசினார்.

நடிகர் விஜய்:

Continues below advertisement

மாணவர்களுக்கு நல்ல விஷயங்களை அறிவுரைகளாக கூறிய நடிகர் விஜய், அரசியல் தொடர்பான தனது கருத்தை மறைமுகமாக மாணவர்களிடம் தெரிவித்தார். நடிகர் விஜய் மாணவர்கள் மத்தியில் அரசியல் தொடர்பாக பேசியதாவது, “நீங்கள் தான் அடுத்த வாக்காளர்கள். அடுத்து வரும் நல்ல நல்ல தலைவர்களை தேர்ந்தெடுங்கள். நம்ம கையை வைத்து நம்மளையே குத்துவாங்க. காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவதை தான் சொல்கிறேன். உங்கள் தாய் தந்தையிடம் சொல்லுங்கள்.

காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடாதீர்கள் என்று. ஒரே ஒரு வேண்டுகோள் விடுகிறேன். உங்களுக்கு பக்கத்தில் தெருவில் தேர்வில் வெற்றி பெறாத மாணவர்கள் இருப்பார்கள். அவர்களிடம் சிறிது நேரம் ஒதுக்கி தேர்வில் வெற்றி பெறுவது எவ்வளவு எளிது என்பதை சற்று புரிய வையுங்கள். மாணவர்கள் தவறான எந்த ஒரு செயலையும் செய்யாதீர்கள். தலைவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அம்பேத்கர் பெரியார் காமராஜர் ஆகியோரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.”

இவ்வாறு அவர் பேசினார்.

அம்பேத்கர், பெரியார், காமராஜர்:

நடிகர் விஜய் நீண்ட நேரம் பேசுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் வெறும் 8 நிமிடங்கள் மட்டுமே பேசினார். அவரது பேச்சுக்கு பின்பு மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், ஊக்கத்தொகையும் விஜய் வழங்கினார். பின்பு மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதிய உணவு வழங்கப்பட உள்ளது.  

மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய் அம்பேத்கர், பெரியார் மற்றும் காமராஜர் போன்ற அரசியல் தலைவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்றும், சமூக வலைதளங்களை கவனமாக கையாள வேண்டும் போன்ற அறிவுரைகளை வழங்கினார்.

மேலும் படிக்க: Vijay Makkal Iyakkam: மாணவர்களை சந்திக்கும் விஜய்: தடபுடலாக விருந்து: உணவுப்பட்டியலில் இடம்பெறுபவை என்னென்ன?

மேலும் படிக்க: Actors Politics Entry: எம்.ஜி.ஆர். முதல் கமல்ஹாசன் வரை... இதுவரை அரசியலுக்கு வந்த ஹீரோக்கள் யார்? யார்?