தமிழ்நாட்டில் அண்மையில் வெளியான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று விருதுகள் வழங்கப்படுகிறது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி  நீலாங்கரை பகுதியில் இருக்கும் ஆர்.கே. கன்வென்சன் செண்டரில் நடைபெற்று வருகிறது. 


+2 பொது தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் வைர நெக்லசை பரிசாக வழங்கினார்.  பின்னர் ஒவ்வொரு மாணவ மாணவியரும் தங்கள் பெற்றோருடன் மேடைக்கு வந்து விஜயிடம் இருந்து உதவி தொகை, சான்றிதழ் ஆகியவற்றை பெற்றுக் கொண்டதுடன், விஜயுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். 


நிகழ்ச்சி அரங்கத்திற்குள் நுழைந்து முதலில் மேடையில் ஏரிய நடிகர் விஜய் பின் கீழ் இறங்கி மாற்றுத்திறனாளி மாணவர் அருகில் அமர்ந்தார். அப்போது அவருக்கு மாணவர் ஒருவர் ஒரு பரிசை வழங்கினார். அதனை பிரித்து பார்த்த நடிகர் விஜய் மகிழ்ச்சியில் கண்கலங்கினார். அதனை தொடர்ந்து அவர் மாணவர்கள் மத்தியில் அமர்ந்தார்.


பின்னர் நடிகர் விஜய் மேடையில் பேசியதாவது: “மேடையில் இந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய மிக முக்கிய காரணம் அண்மையில் ஒரு படம் பார்த்தேன்.  அதில் ஒரு வசனம் நான் கேட்டேன், காடு இருந்தா எடுத்துக்குவாங்க, ரூபா இருந்த பிடிங்குக்குவாங்க, ஆனா படிப்ப மட்டும் உண்ட இருந்த எடுத்துக்குவா முடியாதுன்னு. அது என்ன ரொம்ப பாதிச்ச ஒரு லைனா இருந்துச்சு. நூற்றுக்கு நூறு உண்மை மட்டும் இல்ல, இதுதான் எதார்த்தமும் கூட. அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்விக்கு, எனது தரப்பில் இருந்து ஏதாவது செய்ய வேண்டும் என எனது மனிதில் நீண்டகாலமாக ஓடிக்கொண்டு இருந்தது. அதுக்கான நேரம் தான் இது என நான் நினைக்கிறேன்.


மாணவர்களின் வெற்றிக்கு உதவிய ஆசியர்களுக்கும் ,அவர்களை அடையாளம் காண உதவிய விஜய் மக்கள் இயக்க நண்பர்களுக்கும் நன்றி. 
எனக்கு பிடித்த சில விஷயங்களை சொல்கிறேன். பிடித்தால் எடுத்துக்கொள்ளுங்கள், இல்லையென்றால் விட்டு விடுங்கள். பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள் உடனே விட்டுவிடுகிறேன். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வது மட்டும் முழுமையான கல்வி கிடையாது என ஐன்ஸ்டீன் சொல்லி இருக்கிறார்.” இவ்வாறு நடிகர் விஜய் பேசினார். 


மேலும் படிக்க 


அமலாக்கத்துறை யாரையோ திருப்திபடுத்தும் விதமாக செயல்படுவது ஏற்புடையதல்ல - சபாநாயகர் அப்பாவு


Actors Politics Entry: எம்.ஜி.ஆர். முதல் கமல்ஹாசன் வரை... இதுவரை அரசியலுக்கு வந்த ஹீரோக்கள் யார்? யார்?