சீர்காழி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டிருந்த இளைஞரை சுற்றிவளைத்து கைது செய்துள்ள போலீசார் அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
கட்டுக்குள் வராதா கஞ்சா விற்பனை
மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக அளவு கஞ்சா புழக்கத்தில் இருந்து வருகிறது. இதனால், மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகின்றனர். கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்த போதிலும் காவல்துறையினர்களின் மண்ணைத் தூவியும், சில காவலர்களுக்கு கையூட்டு வழங்கியும், கஞ்சா கட்டுப்பாடு இன்றி பல இடங்களில் விற்பனை என்பது நடந்தேறி வருகிறது.
காவல்துறையினர் எடுக்கும் முயற்சிகள்
இந்நிலையில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் கஞ்சா விற்பனையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டும் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இருந்த போதிலும் கஞ்சா விற்பனை என்பது தொடர் கதையாக இருந்து வருகிறது.
NMMS Exam: 4 ஆண்டுக்கு மாதாமாதம் ரூ.1000: என்எம்எம்எஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
சீர்காழி அருகே கஞ்சா விற்பனை
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வேட்டங்குடி கிராமத்தின் அருகே உள்ள வயல் வெளி பகுதியில் விவசாய கூலித் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. புகாரை தொடர்ந்து புதுப்பட்டினம் காவல்துறையினர் அப்பகுதிக்குச் சென்று தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.
Pincode History: பின்கோட் உருவானது எப்படி? 6 இலக்கங்கள் உணர்த்துவது என்ன? முக்கிய பயன்பாடு என்ன?
கஞ்சா பொட்டலங்களுடன் இளைஞர் கைது
அப்போது வேட்டங்குடி வடக்கு தெருவை சேர்ந்த தர்மலிங்கம் மகன் என்பவரது 23 வயதான கனகராஜ் என்ற இளைஞர் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த கனகராஜ் சுற்றி வளைத்து காவல்துறையினர் கனகராஜை கைது செய்து, அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து சீர்காழி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, நீதிபதி உத்தரவின்பேரில் சீர்காழி கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.