Crime: பூட்டிய ஜவுளிக்கடையில் ரூ.2 லட்சம் திருட்டு - 24 மணி நேரத்தில் சிக்கிய திருடன்

சீர்காழியில் ஜவுளிகடையில் 2 லட்சம் ரூபாய் திருடிய திருடனை 24 நேரத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Continues below advertisement

சீர்காழியில் பூட்டிய 2 ஜவுளிகடைகளில் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட திருடனை காவல்துறையினர் 24 மணி நேரத்தில் பிடித்து சிறையில் அடைந்துள்ளனர்.

Continues below advertisement

இருவேறு ஜவுளிகடைகளில் ஒரே நேரத்தில் திருட்டு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி தெற்கு வீதி, தேர் மேலவீதி ஆகிய இரு இடங்களில் ஜவுளிக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 2 கடைகளில் பூட்டுக்கள் உடைத்து கடையில் இருந்த சுமார்  2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போய் உள்ளது. இதுகுறித்து தேர் மேலவீதி செயல்படும் ஜவுளிக்கடையின் மேற்பார்வையாளர்  கலிவரதன் (வயது 37) என்பவர் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

BAN vs USA: டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எச்சரிக்கை! வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய அமெரிக்கா..!


காவல்நிலையத்தில் புகார்

ஜவுளிக்கடை மேற்பார்வையாளர் கலிவரதன் அளித்த புகாரின் பேரில் சீர்காழி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சீர்காழி காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் காவல்துறை விசாரணையை மேற்கொண்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். மேலும் இது தொடர்பாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அப்பகுதியில் பொறுத்த பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் பதிவை ஆராய்ந்தனர்.  அதில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த ஹைதர் அலி என்பவரின் மகன் 25 வயதான முகமது பாகத் ஜவுளி கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த பணத்தை திருடியது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து முகமது பாகத்தை சீர்காழி காவல்துறையினர் கைது சீர்காழி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செய்து சிறையில் அடைத்தனர்.

மற்றொரு சிக்கல்... மனைவி கொடுத்த அதிரடி புகார்! முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் அதிரடி கைது


24 மணி நேரத்தில் சிக்கிய திருடன்

சீர்காழி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து திருட்டுகள் நடைபெற்ற வரும் நிலையில், இதுநாள் வரை ஒரு திருடர்களும் சிக்காத நிலையில், ஜவுளிகடையில் திருட்டு நடைபெற்று 24 மணி நேரத்தில் திருட்டில் ஈடுபட்ட திருடன் பிடிப்பட்ட நிகழ்வு குறிப்பிடத்தக்கது. மேலும் இதுபோன்று பல வீடுகளில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்ட நபர்களையும் விரைந்து கண்டுபிடித்து, திருபோன தங்கள் நகைகளை காவல்துறையினர் மீட்டு தரவேண்டும் என நகைகளை பறி கொடுத்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Kaamya Karthikeyan: இளம் வயதிலேயே அசத்தல்! 8849 மீட்டர் உயர எவரெஸ்ட் சிகரத்தை ஏறி 12ம் வகுப்பு மாணவி சாதனை..!

Continues below advertisement