சீர்காழியில் கடத்தி வரப்பட்டு கட்டிட தொழிலாளி கொலை - குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரம்

சீர்காழியில் கடத்தி வரப்பட்ட கட்டிட தொழிலாளர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தேர் மேல வீதியில் இன்று காலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் சாலையோரம் இறந்து கிடந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சீர்காழி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர், இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continues below advertisement


காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில், இறந்தவர் மயிலாடுதுறை அருகே உள்ள சீனுவாசபுரம், திருவள்ளுவர் நகரை சேர்ந்த 50 வயதான முருகன் என்பதும், இவர் கொத்தனார் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. இவர் நேற்று காலை வேலைக்கு சென்ற நிலையில் வேலை முடிந்து இரவு வரை வீடு திரும்ப வில்லை எனவும், செம்பனார் கோயில் அருகில் கீழையூர்  பகுதியில் கட்டுமான வேலை செய்து வந்ததும், பின்னர் எவ்வாறு சீர்காழி வந்தார்? எப்படி இறந்தார்? என்பதும் மர்மமாக உள்ளது. 

RPF soldier Shot Dead: ஓடும் ரயிலில் சுட்டுக்கொல்லப்பட்ட ஏஎஸ்ஐ.. ரு.30 லட்சம் நிதியுதவி அறிவிப்பு


மேலும் இறந்தவரின் கையில் நைலான் கயிறு இறுக்க கட்டப்பட்டு இருந்துள்ளதால், இவர் கடத்தி வரப்பட்டு கொலை செய்யப்பட்டு இறந்து இருப்பதாக காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் விசாரணையை தொடர்ந்துள்ளனர். இந்த சூழலில் இப்பகுதியில் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராகள் பழுதால் போலீசார் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த சொகுசு காரின் நான்கு சக்கரத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற நிலையில் தற்போது ஒருவரை கடத்தி வந்து கொலை செய்திருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

President Visit : முதுமலை யானைகள் முகாமிற்கு குடியரசு தலைவர் வருகை ; சுற்றுலா பயணிகளுக்கு தடை


மேலும், அங்கிருந்து ஒரு வீட்டில் பொறுத்தபட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர், அதில் இறந்தவரின் அருகில் ஒருவர் படுத்திருந்ததும், அவர் அவரை கொலை செய்யும் காட்சி பதிவாகியுள்ளது என்றும் அதன் அடிப்படையில் விரைவில் குற்றவாளியை கைது செய்து விடுவோம் என தெரிவித்தனர்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola