புதுக்கோட்டை மாவட்டத்தில்  கடந்த மாதத்தில் இருந்து தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. கிலோ ரூ.100 ஆக உயர்ந்திருந்தது. அதன்பின் விலை குறையாமல் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ ரூ.140 முதல் ரூ.150-க்கு விற்றது. இந்த நிலையில் புதுக்கோட்டை உழவர் சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.170-க்கு விற்பனையானது. சில்லரை கடைகளில் இவற்றின் விலையை விட கூடுதலாக ரூ.10 சேர்த்து விற்றனர். வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ.200 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. வரத்து குறைவால் ஒரு வியாபாரியிடம் இருந்து தக்காளியை வாங்கி மற்றொரு வியாபாரி வியாபாரம் செய்வதன் மூலம் விலை அதிகரிக்கிறது. புதுக்கோட்டை உழவர் சந்தையில் தோட்டக்கலை துறை மூலம் தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்களின் சேவைக்காக இந்த விற்பனையை தொடங்கினா். அவர்களுக்கும் தக்காளி கிடைப்பது அரிதானதால் திருச்சியில் இருந்து வாங்கி வந்து விற்று வருகின்றனர். இதில் கிலோ ரூ.140 வரைக்கும் விற்று வருகின்றனர். இதில் தினமும் தோட்டக்கலை துறையினருக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. பொதுமக்களுக்காக தொடர்ந்து சேவையை அளித்து வருகின்றனர். 





 

மேலும், புதுக்கோட்டை உழவர் சந்தையில் விற்பனையான காய்கறிகளில் சிலவற்றின் விலை விவரம் கிலோவில் வருமாறு:- கத்தரிக்காய் ரூ.70-க்கும், வெண்டைக்காய் ரூ.40-க்கும், புடலங்காய் ரூ.25-க்கும், பாகற்காய் ரூ.65-க்கும், அவரைக்காய் ரூ.90-க்கும், கேரட் ரூ.60-க்கும், பீட்ரூட் ரூ.40-க்கும், பீன்ஸ் ரூ.100-க்கும், சேனைக்கிழங்கு ரூ.70-க்கும், சேப்ப கிழங்கு ரூ.70-க்கும், கருணைக்கிழங்கு ரூ.90-க்கும், சின்ன வெங்காயம் ரூ.80-க்கும், பெரிய வெங்காயம் ரூ.30-க்கும் விற்றது. தக்காளி உள்பட காய்கறிகள் விலையேற்றத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். ஆகையால் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர். 

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண